azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Today people want to live happily but not lead ideal lives. Parents, for instance, do not set a good example to the children. In the modern age, the father does not instruct the child properly and the child does not pay heed to the words of the mother. Where there are some good children, leading a pious life, the fathers rebuke them saying, "Have you gone crazy? Don't take part in Bhajans or social service." Parents who behave in this manner are like Hiranyakashipu, who could not tolerate his son worshipping Hari. Today we have many parents like Dhritarashtra and Hiranyakashipu, but few who encourage their children to adhere to righteousness. Children today do not relish edifying works like the Ramayana, Mahabharata and the Bhagavatham. They waste their time on reading trash. Parents should see that children do not read bad books. If the nation has to prosper, improvement must start with the parents. (Divine Discourse, Nov 19, 1995)
WHEN THERE IS HARMONY IN THE HOME, THERE WILL BE ORDER IN THE NATION;
WHEN THERE IS ORDER IN THE NATION, THERE WILL BE PEACE IN THE WORLD. - BABA
இந்நாளில், மக்கள் மகிழ்ச்சியான வாழ விரும்புகிறார்களே அன்றி, இலட்சியமான வாழ்க்கை நடத்துவதில்லை. உதாரணமாக, பெற்றோர்கள், குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்து காட்டுவதில்லை. இந்த நவீன யுகத்தில், தந்தை குழந்தைக்கு சரியாக அறிவுறுத்துவதில்லை; குழந்தையும், தாயின் வாரத்தைகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை. சில நல்ல குழந்தைகள் ஒரு பக்திமயமான வாழ்க்கை நடத்தினால், அவர்களது தந்தையர்கள், ‘’ உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது ? பஜனை அல்லது சமூக சேவையில் எல்லாம் பங்கு எடுத்துக் கொள்ளாதீர்கள் ‘’ என்று அதட்டுகிறார்கள். , இப்படி நடந்து கொள்ளும் பெற்றோர்கள்,ஹரியை வழிபட்ட பிரஹலாதனைச் சகித்துக் கொள்ள இயலாத ஹரிண்யகசிபுவைப் போன்றவர்களே. இந்நாளில், திருதராஷ்டிரன் மற்றும் ஹரிண்யகசிபுவைப் போன்ற பல பெற்றோர்கள் இருக்கிறார்கள்; ஆனால், வெகு சிலரே, தங்களது குழந்தைகள் தர்மத்தைப் பற்றி ஒழுகுவதற்கு ஊக்கம் அளிக்கிறார்கள். குழந்தைகள் இன்று, பக்தியைத் தூண்டும் வார்த்தைகளான ஸ்ரீமத் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற வார்த்தைகளை ரசிப்பதில்லை. அவர்கள் , தங்களது நேரத்தை, குப்பையானவற்றைப் படிப்பதில் செலவிடுகிறார்கள். பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் தீய புத்தகங்களைப் படிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், முன்னேற்றம் . பெற்றோர்களிடமிருந்து துவங்க வேண்டும்.
இல்லத்தில், இசைவு இருக்குமானால், நாட்டில் ஒழுங்கு இருக்கும்.
நாட்டில் ஒழுங்கு இருக்குமானால், உலகில் அமைதி நிலவும் -பாபா