azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

With the Name as the very breath of your life, you must engage in all life's activities, with no fear of a fall. If you make good use of chanting the Lord’s Name, your life will be sanctified. Whatever work you undertake, do it as an offering to God, chanting His Name. Even while you are walking, think that it is God who is making you walk, since Divinity is present in a subtle form in every atom and cell in this Universe. Unable to recognise this truth, people think, ‘I came by walk, I walked so many miles, etc.’ Such work comes under the physical realm, not spiritual. Hence whatever you think, speak or do, do it befittingly, considering every work as God’s command and God’s work. With that attitude chant any divine name wholeheartedly and sanctify your life. Then every activity you undertake will be successful. [Divine Discourse, 13-Nov-2007]
FIRMLY BELIEVE THAT THE LORD’S NAME IS THE BOAT, WHICH WILL TAKE YOU OVER THE SEA OF WORLDLY LIFE. THE NAME IS MORE EFFICACIOUS THAN THE CONTEMPLATION OF THE FORM. - BABA
இறைவனது திருநாமத்தை உங்களது வாழ்க்கையின் உயிர் மூச்சாகவே கொண்டு, ஒரு வீழ்ச்சியின் எந்த அச்சமும் இன்றி, வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் நீங்கள் ஈடுபட வேண்டும். இறை நாமஸ்மரணையை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால்,உங்கள் வாழ்க்கை புனிதமடையும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவனது திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே, அதை இறைவனுக்கு ஒரு அர்ப்பணமாகச் செய்யுங்கள். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணு மற்றும் உயிரணுவிலும் தெய்வீகம் ஒரு நுண்ணிய வடிவில் உறைவதால், நீங்கள் நடந்து செல்லும் போதும் கூட, இறைவனே உங்களை நடக்க வைக்கிறான் என்று எண்ணுங்கள். இந்த சத்தியத்தை உணர முடியாமல், மனிதர்கள், ‘’ நான் நடந்து வந்தேன்;, நான் பல மைல்கள் நடந்தேன் ‘’ என்றெல்லாம் நினைக்கிறார்கள். இப்படிப் பட்ட வேலை பௌதீகமானதே அன்றி, ஆன்மீகமானதல்ல. எனவே, ஒவ்வொரு வேலையையும், இறைவனது ஆணை மற்றும் இறைப்பணி என்றே கருதி, நீங்கள் எதைச் சிந்தித்தாலும், சொன்னாலும் அல்லது செய்தாலும் அதற்கு ஏற்றவாறு செய்யுங்கள். அந்த மனப்பாங்குடன், இறைவனது எந்தத் திருநாமத்தையும், மனதார உச்சரித்து, உங்களது வாழ்க்கையை புனிதப் படுத்திக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் ஆற்றும் எந்தச் செயலும் வெற்றியடையும்.
இறைவனது திருநாமமே,ஸம்ஸார சாகரத்தைக் கடப்பதற்கான தோணி என்பதை உறுதியாக நம்புங்கள். இறை ரூபத்தை தியானிப்பதை விட, இறை நாமம் அதிக பயனளிக்க வல்லதாகும் - பாபா