azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

You may acquire various types of knowledge and travel across the globe. But, in spite of all your worldly achievements, you are not able to understand the principle of love. Once you have the taste of selfless love, you will see the world in its real form. Therefore, truly become embodiments of love. Let love flow incessantly from your heart. Immerse yourself in the flow of love. Out of love, emerges truth and righteousness. Speak the truth, practice righteousness. Truth and righteousness are the two pillars on which the mansion of human life rests. Adore love. Live in love. There is no greater education than this. Traverse the path of love. Partake of the food of love. It is not enough if you merely partake of love, you should also assimilate and digest it. Only then the essence of love will spread to every cell of your body giving you immense strength and wisdom. (Divine Discourse, Oct 17, 2003)
TO PROCEED FROM BEING HUMAN TO DIVINE, PURE LOVE IS THE ONLY MEANS.
ALL OTHER MEANS ARE OF NO AVAIL. - BABA
நீங்கள் பலவிதமான அறிவைப் பெற்று, உலகையே சுற்றி வந்திருக்கக் கூடும். ஆனால், உங்களது அனைத்து உலகியலான சாதனைகளுக்குப் பிறகும், உங்களால் ப்ரேம தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் ஒருமுறை தன்னலமற்ற ப்ரேமையின் சுவையை அனுபவித்து விட்டால், நீங்கள் இந்த உலகை , அதன் உண்மையான ரூபத்தில் காண்பீர்கள். எனவே, உண்மையிலேயே ப்ரேமையின் திருவுருவங்களாக ஆகுங்கள். உங்கள் இதயத்திலிருந்து, ப்ரேமை, இடையறாது பெருக்கெடுத்து ஓடட்டும். ப்ரேமையின் ப்ரவாகத்தில், உங்களையே ஆழ்த்திக் கொள்ளுங்கள். ப்ரேமையிலிருந்தே, சத்யமும், தர்மமும் வெளிப்படுகின்றன. சத்தியத்தைப் பேசுங்கள், தர்மத்தைக் கடைப் பிடியுங்கள். சத்தியம் மற்றும் தர்மமுமே, மனித வாழ்க்கை எனும் மாளிகை நிலை கொண்டிருக்கும் இரண்டு தூண்களாகும். ப்ரேமையைப் போற்றுங்கள். ப்ரேமையில் வாழுங்கள், இதைவிடச் சிறந்த கல்வி வேறு எதுவும் இல்லை. ப்ரேமையின் பாதையில் செல்லுங்கள். ப்ரேமை எனும் உணவை உட்கொள்ளுங்கள். ப்ரேமையை வெறுமனே உட்கொண்டால் மட்டும் போதாது; அதை உட்கிரகித்து , ஜீரணிக்க வேண்டும். அதன் பிறகே, ப்ரேமையின் சாரம், உங்களது உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் பரவி, உங்களுக்கு அளவற்ற சக்தியையும், ஞானத்தையும் அளிக்கும்.
மனிதத்துவத்திலிருந்து, தெய்வீகத்திற்குச் செல்வதற்கு பரிசுத்தமான ப்ரேமையே ஒரே வழியாகும். மற்ற வழிகள் எல்லாம் பயனற்றவையே- பாபா