azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no point in talking sweetly if there is no sweetness in your heart. Sweetness in speech and bitterness in heart is not the quality of a human being. There should be sweetness in your thought, word and deed. This is the true sign of a human being. There is love in you, but you are not able to express it in the proper way. You should fill your life with selfless love. There is nothing superior to love in this world. Human beings are considered to be most sacred because they have the unique quality of love in them. But you are not able to realize the value of human birth. God incarnates in human form in order to spread the message of selfless love. Once you have selfless love in your heart, you can conquer the whole world. (Divine Discourse, Oct 17, 2003.)
I WANT EACH ONE OF YOU TO CULTIVATE PURITY, LOVE AND COMPASSION. - BABA
உங்கள் இதயத்தில் இனிமை இல்லை என்றால், இனிமையாகப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. பேச்சில் இனிமையும், இதயத்தில் கசப்பும் இருப்பது ஒரு மனித லக்ஷணம் அல்ல.உங்களது சிந்தனை, சொல் மற்றும் செயலில் இனிமை இருக்க வேண்டும். இதுவே ஒரு மனிதனின் உண்மையான அறிகுறியாகும். உங்களுள் ப்ரேமை இருக்கிறது; ஆனால் அதை சரியான முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியவில்லை. நீங்கள், உங்கள் வாழ்க்கையை தன்னலமற்ற ப்ரேமையால் நிரப்ப வேண்டும். ப்ரேமையை விட உயர்ந்த எதுவும் இந்த உலகில் இல்லை. இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த ப்ரேமை குணம் அவர்களுள் இருப்பதால் தான் மனிதர்கள் மிகவும் புனிதமானவர்களாகக் கருதப் படுகிறார்கள். ஆனால், மனிதப் பிறவியின் மதிப்பை உங்களால் உணர முடியவில்லை. தன்னலமற்ற ப்ரேமையின் உபதேசத்தைப் பரப்புவதற்காகத் தான் , இறைவன் மனித உருவில் அவதாரம் எடுத்து வருகிறான். உங்கள் இதயத்தில் ஒருமுறை தன்னலமற்ற ப்ரேமை இருந்து விட்டால், நீங்கள் இந்த அகில உலகத்தையும் வெல்ல முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும், பரிசுத்தம், ப்ரேமை மற்றும் பரிவை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் - பாபா