azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Revere Knowledge as you revere your father, adore Love as you adore your mother, bond fondly with Dharma (righteousness) as if it is your own brother, confide in Daya (compassion) as if it is your dearest friend, have Shantam (calmness) as your better half, and treat Sahana (fortitude) as if it is your own beloved son. These are your genuine kith and kin. Move with them, live with them, do not forsake or neglect them. Living with these kinsmen is the best recipe. That is the best atmosphere to ensure the discipline and detachment needed for mind control. Mere prayer will not do. You will have to swallow and digest the morsel that is put into the mouth; repetition of the name of the dish is of no use. The mother feeds lovingly, but the child must take it in with avidity and relish. When an earthly mother has so much love, who can estimate the love of the Mother of all beings, the Jagatjanani? (Divine Discourse, Oct 09, 1964.)
WHEN THE MIND AND INTELLECT UNITES, HUMANNESS ATTAINS A STATE OF FREEDOM,
WHICH IS REFERRED TO AS LIBERATION (MOKSHA). - BABA
ஞானத்தை உங்களது தந்தையைப் போன்று மதியுங்கள்;ப்ரேமையை உங்களது தாயைப் போன்று போற்றுங்கள்; தர்மத்தை உங்களது சொந்த சகோதரனாகக் கருதி பாசத்துடன் பிணைந்திருங்கள்; தயையை உங்களது மிகவும் பிரியமான நண்பனாகக் கருதி அந்தரங்கங்ளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; சாந்தத்தை உங்களது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டு, சஹானாவை (மனவலிமை) உங்களது சொந்த பிரியமான மகனாகக் கருதுங்கள். இவைகளே உங்களது உண்மையான உற்றார் உறவினர்கள். அவற்றுடன் சுற்றித் திரியுங்கள், அவைகளோடு வாழுங்கள், அவற்றைக் கைவிடவோ அல்லது உதாசீனப்படுத்தவோ செய்யாதீர்கள்.இந்த உறவினரோடு வாழ்வதே மிகச் சிறந்த செய்முறையாகும்.மனக் கட்டுப்பாட்டிற்குத் தேவையான ஒழுங்குமுறை மற்றும் பற்றின்மையை உறுதி செய்வதற்கு இதுவே மிகச் சிறந்த சூழ்நிலையாகும்.வெறும் பிரார்த்தனை மட்டும் போதுமானதன்று. நீங்கள் வாயில் இட்டுக் கொண்ட கவளத்தை விழுங்கி ஜீரணிக்க வேண்டும்; இறை நாமம் என்ற உணவின் பெயரைத் திரும்பத் திரும்ப சொல்வது மட்டுமே பலனளிக்காது. தாய் ப்ரேமையுடன் ஊட்டுகிறாள்; ஆனால் அதை குழந்தை விரும்பியும், நன்கு சுவைத்தும் உண்ண வேண்டும். உலகியலான தாய்க்கே இவ்வளவு ப்ரேமை இருக்குமானால், அனைத்து ஜீவராசிகளின் தாயான ஜகத்ஜனனியின் ப்ரேமையை யாரால் அளவிட முடியும்?
மனமும், புத்தியும் சங்கமம் ஆகும்போது, மனிதத்துவம், ஒரு சுதந்திரமான நிலையை எய்துகிறது; இதுவே மோக்ஷம் எனப்படுகிறது - பாபா