azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

God's love is totally selfless. It is absolutely pure, eternal and flawless. Human love is self-centred and tainted. Such a love cannot merge with God's love. It is only when you are free from egoism, pride, hatred and envy that God will abide in you. Without tyaaga (renunciation) if a person is immersed in worldly pleasures and leads a mundane life, all his devotion is only artificial and a kind of self-deception. Such devotion will not lead one to God. Today the world is full of such persons. People claim that they are loving God. But everyone loves God for one’s own sake and not for the sake of God. This is pure selfishness. You seek all things in the world for your own sake. Even God is sought for such a reason. God cannot be got so easily. The heart has only a single seat. There is room in it for only one person. If you install worldly desires on that chair, how can you expect God to sit on it? God will enter that seat only if you empty it of all other things. (Divine Discourse, Aug 12, 1992)
TO PROCEED FROM BEING HUMAN TO DIVINE, PURE LOVE IS THE ONLY MEANS.
ALL OTHER MEANS ARE OF NO AVAIL. - BABA
இறைவனது ப்ரேமை முழுவதும் தன்னலமற்றது. அது முற்றிலும் பரிசுத்தமானதும், நிரந்தரமானதும், அப்பழுக்கற்றதும் ஆகும். மனிதனின் ப்ரேமை சுயநலமானதும்,களங்கமானதும் ஆகும். இப்படிப் பட்ட ப்ரேமை, இறைவனது ப்ரேமையுடன் ஒன்றிணைய முடியாது. நீங்கள் அஹங்காரம், தற்பெருமை, த்வேஷம் மற்றும் பொறாமை இன்றி இருந்தால் மட்டுமே, இறைவன் உங்களுள் உறைவான். தியாக உணர்வு இன்றி, ஒருவர் உலக சுகங்களில் மூழ்கி,ஒரு சாதாரணமான வாழ்க்கையை நடத்துவாரே ஆனால், அவரது பக்தி அனைத்தும் போலியானதும், ஒருவிதமான சுய ஏமாற்று வேலையும் ஆகும். இப்படிப் பட்ட பக்தி ஒருவரை இறைவன் பால் இட்டுச் செல்லாது. இன்று, உலகம் முழுவதும் இப்படிப் பட்ட மனிதர்களே நிறைந்து இருக்கிறார்கள். மனிதர்கள், தாங்கள் இறைவனை நேசிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது சொந்த நலனுக்காக இறைவனை நேசிக்கிறார்களே அன்றி, இறைவனுக்காகவே அல்ல. இது வெறும் சுயநலமே. நீங்கள் இந்த உலகின் அனைத்து பொருட்களையும், உங்களுக்காகவே வேண்டுகிறீர்கள். இறைவன் கூட, இந்த ஒரு காரணத்திற்காகவே நாடப்படுகிறான். இறைவனை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியாது. இதயத்தில் ஒரே ஒரு இருக்கை தான் இருக்கிறது. அதில் ஒரே ஒருவருக்குத் தான் இடம் உள்ளது. நீங்கள் அந்த நாற்காலியில் உலகியலான ஆசைகளை உட்கார வைத்து விட்டால், இறைவன் அதில் அமருவான் என்று நீங்கள் எவ்வாறு எதிர் பார்க்க முடியும் ? அதில் உள்ள எல்லாப் பொருட்களையும் நீங்கள் நீக்கினால் தான், இறைவன் அந்த இருக்கைக்கு வருவான்.
மனித நிலையிலிருந்து, தெய்வீக நிலைக்குச் செல்வதற்குப் பரிசுத்தமான ப்ரேமையே ஒரே வழியாகும். மற்ற வழிகள் எல்லாம் பயனற்றவையே- பாபா