azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Although God dwells in every person, this fact remains latent like oil in the gingelly seed. To manifest the Divine within you, you must go through trials and ordeals. Love for God should grow as a result of adversity. Just as gold improves in brilliance the more it is heated in the crucible, your devotion must shine when it goes through a constant purificatory process. Remember, for all the cruelty and violence that we find in the world today, the root cause is selfishness. This must be eradicated. Experience the Love Principle and rid the world of hatred. Once hatred is destroyed, world will be free from violence and strife. Cultivate Selfless Love and manifest love in all your thoughts and actions. You will experience bliss. When you are filled with Love for God, all pains and troubles will be forgotten. To propagate this principle of Divine Love, God descends in human form from time to time. (Divine Discourse, Aug 21, 1992.)
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK –
HENCE SACRIFICE THESE BAD QUALITIES. - BABA
இறைவன் ஒவ்வொரு மனிதனுள்ளும் உறைகிறான் என்றாலும் கூட, இந்த உண்மை, எள்ளின் உள் எண்ணெயைப் போல, மறைந்து உள்ளது. உங்களுள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்த, நீங்கள் சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும். இன்னல்களின் விளைவாக, இறைவன் பால் கொள்ளும் ப்ரேமை வளர வேண்டும். மேலும், மேலும் உருக்குவதனால் ஒளி விட்டு ஜொலிக்கும் தங்கத்தைப் போல, ஒரு இடையறாத பரிசுத்தப்படுத்தப் படும் முறைக்கு ஆளாகும் போது, உங்களது பக்தி பிரகாசிக்க வேண்டும். இன்று இந்த உலகில் நாம் காணும் அனைத்து கொடுமை மற்றும் வன்முறைக்கும், சுயநலமே மூல காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை அடியோடு அழித்தே ஆக வேண்டும். ப்ரேம தத்துவத்தை அனுபவித்து, த்வேஷத்தை உலகிலிருந்து அகற்றி விடுங்கள். ஒருமுறை த்வேஷம் அழிக்கப் பட்டு விட்டால், உலகம் சண்டை, சச்சரவுகள் இன்றி இருக்கும். தன்னலமற்ற ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொண்டு, அந்த ப்ரேமையை உங்களது சிந்தனைகள் மற்றும் செயல்களில் வெளிப்படுத்துங்கள். நீங்கள் பேரானந்தத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் இறைவன் பால் கொண்ட ப்ரேமையால் நிரம்பி இருக்கும் போது, அனைத்து துன்பங்களும், துயரங்களும் மறந்து போய் விடும். இந்த தெய்வீக ப்ரேம தத்துவத்தைப் பரப்புவதற்காகத் தான் இறைவன் அவ்வப்போது மனித உருவம் ஏற்று, அவதாரமாக இற(ர)ங்கி வருகிறான்.
ஆசை பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை கர்மாவை அழிக்கிறது – எனவே, இந்தத் தீய குணங்களை தியாகம் செய்து விடுங்கள். - பாபா