azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

What can you achieve with your paltry intelligence? A man once laughed at God for giving the majestic banyan tree a tiny seed and conferring on the ash gourd, a gigantic fruit. “No sense of proportion,” he thought! He was travelling, and as time passed, he felt tired and happened to sleep under the shade of a banyan tree. When he woke up, he saw many seeds that had fallen on his body. If only the banyan tree had seeds in proportion to its size, a single seed falling from that height would have killed the critic in no time! He thanked God for His perfect logic and wisdom and continued the journey, feeling safe and secure. Take everything as it comes, and cultivate contentment. Do not multiply your wants and foster greed and despair. You take off your warm clothing when you start feeling warm yourself. The coat of desire has to be taken off when the warmth of devotion increases. Strive to secure grace, do not strive to secure any lesser fruit. (Divine Discourse, Oct 4, 1962.)
LOVE IS SELFLESSNESS. - BABA
உங்களது அற்ப புத்தியால், நீங்கள் எதை சாதிக்க முடியும்? ஒரு மனிதன் ஒரு முறை, கம்பீரமான ஆலமரத்திற்கு ஒரு சிறிய விதையையும், பூசணிச் செடிக்கு ஒரு பெரிய பழத்தையும் அளிப்பதைக் கண்டு, இறைவனைப் பார்த்து எள்ளி நகையாடினான். ‘’ எதற்கு எதை அளிப்பது என்ற விவஸ்தையே இல்லை’’ என எண்ணினான். அவன் பயணம் செய்து கொண்டு இருந்தான்; சில காலம் கழித்து அவன் களைத்துப் போய், ஒரு ஆலமரத்தின் நிழலில், இளைப்பாற நேர்ந்தது. அவன் கண் விழித்துப் பார்த்த போது, அவன் உடல் மீது பல விதைகள் விழுந்திருப்பதைக் கண்டான். ஆலமரத்திற்கு மாத்திரம் அதன் பருமனுக்கு ஏற்ற அளவு விதைகள் இருந்திருந்தால், அந்த உயரத்திலிருந்து விழும் ஒரு விதை , இந்த மேதாவியை கணப்பொழுதில் கொன்று இருக்கும் ! இறைவனது குறையற்ற சிந்தனை மற்றும் ஞானத்தைக் கண்டு, தான் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உணர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறு , தனது பயணத்தைத் தொடர்ந்தான். வருவதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு, மனத் திருப்தியை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். உங்களது ஆசைகளைப் பெருக்கிக் கொண்டே சென்று, பேராசையையும்,விரக்தியையும் பேணாதீர்கள். நீங்களே புழுக்கமாக உணரத் தொடங்கும் போது, உங்களது கம்பளி ஆடைகளை நீங்கள் கழட்டி விடுகிறீர்கள். பக்தியின் வெப்பம் அதிகரிக்கும் போது, ஆசைகள் எனும் கோட்டை கழட்டி விட வேண்டும். இறை அருளைப் பெறப் பாடு பட வேண்டுமே அன்றி, அதை விடத் தாழ்ந்தவற்றிற்காகப் பாடுபடாதீர்கள்.
ப்ரேமை தன்னலமற்றது- பாபா