azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

When a person dies, the property and things remain at home; they do not go with the person into the beyond. Even the relatives cannot accompany; only the good or the bad name one has earned will last. So every one of you must live in such a way that posterity will remember you with gratitude and joy. To lead the good life, constant prompting from the God within is a great help. That inspiration can be got only by constantly reciting the Lord's Name (Namasmarana) and calling on the inner springs of Divinity. Practice incessant Namasmarana. Also remember, by simply singing loud or shouting Shivoham, you cannot become Shiva; you must develop the qualities of Divinity like universal love, absence of attachment, etc. Then you will be entitled to assert Shivoham, and even if you do not assert at all, you will be Shiva, for you will then have no aham feeling (no egoism)! (Sathya Sai Speaks, Vol 6, Ch 27)
WHY FEAR WHEN I AM HERE? PLACE ALL YOUR FAITH IN ME.
I SHALL GUIDE YOU AND GUARD YOU ALWAYS. - BABA
ஒரு மனிதன் இறக்கும் போது, அவனது சொத்துக்களும்,உடமைகளும் வீட்டோடையே இருந்து விடுகின்றன; அவை, அந்த மனிதனுடன் இவ்வுலகைத் தாண்டிச் செல்வதில்லை. உற்றார், உறவினரும் கூட உடன் செல்ல முடியாது; ஒருவர் ஈட்டிய நல்ல அல்லது கெட்ட பெயரே நிலைத்திருக்கும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும், வருங்காலத்தினர், உங்களை நன்றி உணர்வுடனும், சந்தோஷமாகவும் நினைவு கூறும் வகையில், வாழ வேண்டும். நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு, உள்ளுறையும் இறைவனின் தூண்டுதல் ஒரு மிகப் பெரிய உதவியாகும். இடையறாத இறை நாமஸ்மரணை மற்றும் உள்ளார்ந்த தெய்வீக ஊற்றுக்களை அறைகூவுதல் ஆகியவற்றின் மூலமே, அந்த உத்வேகத்தைப் பெற முடியும். இடையறாத இறை நாமஸ்மரணையைக் கடைப்பிடியுங்கள். மேலும், வெறுமனே உரத்த குரலில் பாடுவது அல்லது சிவோஹம் ( நானே சிவம்) எனக் கூக்குரலிடுவதன் மூலம் , நீங்கள் சிவனாக ஆக மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் தெய்வீகப் பண்புகளாகிய பிரபஞ்சமயமான ப்ரேமை, பற்றின்மை ஆகியவற்றை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே, நீங்கள் சிவோஹம் என ஆணித்தரமாகக் கூறிக் கொள்ள முடியும்; நீங்கள் அவ்வாறு செய்விடினும் கூட, நீங்கள் சிவமே, ஏனெனில், உங்களிடம் பின்னர் அஹம் என்ற உணர்வு ( அஹங்காரம் ) எள்ளளவும் இருப்பதில்லை !
நான் இங்கிருக்க பயமேன்? உங்களது அனைத்து விசுவாசத்தையும் என் மீது வையுங்கள். நான் என்றும் உங்களை வழி நடத்திக் காத்திடுவேன்- பாபா