azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 30 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 30 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not get discouraged that you are not able to concentrate for long when you meditate, or progress much spiritually. When you learn to ride a bicycle, you do not get the skill of keeping the balance immediately. You push the cycle along to an open ground, hop and skip, leaning now to one side and now to the other, and even terribly failing with the cycle falling upon you on many an attempt, before you are able to ride with skill. But once you get it, you never again have to worry about the balance. Automatically, you are able to make the necessary adjustments to correct the balance, is it not? After getting this skill, you can ride even through narrow streets and lanes; you do not need an open road. You can negotiate your vehicle through the most crowded thoroughfares. So too, consistent and steady practice will equip you with a concentration that will sustain you in the densest of surroundings and the most difficult situations. (Divine Discourse, Feb 23, 1958)
SERVICE BROADENS YOUR VISION, WIDENS YOUR AWARENESS
AND DEEPENS YOUR COMPASSION. - BABA
நீங்கள் தியானம் செய்யும் போது, அதிக நேரம் மனதை ஒருமுகப் படுத்த முடியவில்லை என்றாலோ அல்லது ஆன்மீகமாக அதிகம் முன்னேற முடியவில்லை என்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது, சரிசமமாக இருக்கும் திறனை உடனே பெறுவதில்லை. நீங்கள், அதை திறமையாக ஓட்டத் தொடங்குவதற்கு முன், சைக்கிளை ஒரு திறந்த வெளிக்குத் தள்ளிக் கொண்டு சென்று, ஓடிக் குதித்து, , ஒரு பக்கமாகச் சரிந்து,பின் மறு பக்கம் சரிந்து, பல முறை சைக்கிளே கூட உங்கள் மீதே விழும் அளவிற்கு தோல்வி அடைகிறீர்கள். ஆனால், ஒருமுறை அந்தத் திறனைப் பெற்று விட்டால், அதன் பின் நீங்கள் ஒரு போதும் சரிசமமாக இருப்பதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. தானாகவே, சமமாக இருப்பதற்குத் தேவையான மாற்றங்களை உங்களால் செய்ய முடிகிறது அல்லவா? இந்தத் திறனைப் பெற்ற பின், உங்களால் குறுகலான வீதிகள் மற்றும் சந்து பொந்துகளில் கூட ஓட்ட முடியும் ; உங்களுக்கு ஒரு திறந்த வீதி தேவையில்லை. உங்களது வண்டியை மிகவும் கூட்டம் நிறைந்த இடங்களில் கூட, உங்களால் ஓட்டிச் செல்ல முடியும். அதைப் போலவே, சீரான மற்றும் நிலையான ஆன்மீகப் பயிற்சி, மிகவும் இருண்ட சூழ்நிலைகள் மற்றும் மிகக் கடுமையான சந்தர்ப்பங்களையும் தாங்கி நிற்கக் கூடிய ஒரு மனக்குவிப்பை உங்களுக்குத் தந்து விடும்.
சேவை, உங்களது பார்வையை பரவலாக்கி, விழிப்புணர்வை விசாலமாக்கி, பரிவுணர்வை ஆழமாக்குகிறது - பாபா