azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The greatest defect today is the absence of inquiry into the nature of the Self. That is the root cause of all this restlessness. If you are eager to know the truth about yourself, then, even if you do not believe in God, you will not go astray. All agitations must cease one day, isn’t it? Inquiry into the nature of your Self is best explained in the Upanishads. Just as a river’s flow is regulated by bunds and flood waters, and is directed to the sea, so too the Upanishads regulate and restrict the senses, the mind, and the intellect and help one to reach the sea and merge one’s individuality in the Absolute. Will scanning a map or turning over a guidebook give you the thrill of the actual visit? Will it even give you a fraction of the joy and knowledge of a journey through that land? Upanishads and the Gita are your maps and guidebooks. Study Upanishads and scriptures with the goal to put the advice into practice and experience them. (Divine Discourse, Feb 23, 1958)
WHEN YOU THINK, SPEAK AND DO GOOD, PEACE ALONE WILL ENSUE - BABA
ஆத்மாவின் தன்மையைப் பற்றிய ஆராய்ச்சி இல்லாமையே இன்றைய மிகப் பெரிய குறையாகும். இந்த அனைத்து அமைதியின்மைக்கும், அதுவே மூல காரணம். உங்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், பின்னர், நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றாலும் கூட, நீங்கள் வழி தவறிப் போக மாட்டீர்கள். அனைத்து கலக்கங்களும் ஒரு நாள் தீர்ந்து தானே ஆக வேண்டும் இல்லையா? உங்களது ஆத்மாவின் தன்மையைப் பற்றிய ஆராய்ச்சி, உபநிஷதங்களில் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது. எவ்வாறு ஒரு நதியின் ஓட்டமும், வெள்ளப் பெருக்கும் கரைகளால் சீர் படுத்தப் பட்டு, கடலை நோக்கி செலுத்தப் படுகிறதோ, அவ்வாறே, உபநிஷதங்களும், புலன்கள், மனம் மற்றும் புத்தியை சீரமைத்து, கட்டுப் படுத்தி, ஒருவர் கடலை அடைவதற்கும், ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்றரக் கலப்பதற்கும் உதவுகின்றன. ஒரு வரைபடத்தை மேலாகப் பார்ப்பதோ அல்லது வழிகாட்டிப் புத்தகத்தைப் புரட்டுவதோ, ஒரு இடத்தை நேரில் பார்ப்பதன் சிலிர்ப்பை, உங்களுக்குத் தர முடியுமா? அந்தப் பிரதேசத்தில் செய்யும் ஒரு பிரயாணம் தரும் சந்தோஷம் மற்றும் அறிவின் ஒரு சிறு பங்கையாவது, அது தரமுடியுமா? உபநிஷதங்களும், ஸ்ரீமத் பகவத் கீதையும், உங்களது வரைபடங்களும், வழிகாட்டிப் புத்தகங்களுமே. அவை தரும் அறிவுரையை நடைமுறையில் கடைப்பிடித்து, அவற்றை அனுபவ ரீதியாக உணரும் நோக்கத்துடன், உபநிஷதங்களையும், வேதங்களையும், படியுங்கள்.
நீங்கள் சிந்திப்பது, சொல்வது மற்றும் செய்வது
நல்லதாக இருந்தால், சாந்தி மட்டுமே நிலவும் - பாபா