azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion is referred to as upasana, which means dwelling near, feeling the Presence, or sharing the sweetness of Divinity. The yearning for upasana prompts you to go on pilgrimages, to construct and renovate temples, and to consecrate images. All this is karma of a high order; they lead to spiritual wisdom. First, start with the idea, “I am in the Light.” Then the feeling, “The light is in me,” becomes established, leading to the conviction, “I am the Light.” That is supreme wisdom. A dog caught in a room of mirrors sees all its myriad reflections as not itself but as rivals, competitors, and other dogs that must be barked at. So it tires itself out by jumping on these reflections, and when the images also jump, it becomes mad with fury. A wise person, however, sees oneself everywhere and is at peace, even happy that there are so many reflections all around. That is the attitude you must learn to possess, that will save you from needless bother. (Divine Discourse, Jul 7, 1963.)
பக்தி உபாஸனா எனப்படுகிறது;அதாவது, இறைவனுக்கு அருகாமையில் இருந்து, அவனது இருக்கையை உணர்ந்து அல்லது அவனது இனிமையை பகிர்ந்து கொள்வது என்று பொருள். உபாஸனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம், உங்களை தீர்த்த யாத்திரை செல்லவும், ஆலயங்களை கட்ட மற்றும் புனருத்தாரணம் செய்யவும், விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்யவும் தூண்டுகிறது. இந்த கர்மா அனைத்தும் ஒரு உயர்ந்த நிலையானதாகும்; அவை ஆன்மீக ஞானத்திற்கு இட்டுச் செல்லுகின்றன. முதலில், ‘’ நான் ஜோதியில் இருக்கிறேன்’’ என்ற கருத்தில் தொடங்குங்கள். பின்னர், ‘’ ஜோதி என்னுள் இருக்கிறது ‘’ என்ற சிந்தனை வேறூன்றி, ‘’ நானே ஜோதி ‘’ என்ற உறுதியான நம்பிக்கைக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள். இதுவே தலைசிறந்த ஞானம். கண்ணாடிகள் நிறைந்த ஒரு அறையில் சிக்கிக் கொண்ட ஒரு நாய், தனது எண்ணற்ற பிரதிபலிப்புக்களை தானே தான் என அறியாது, தனது எதிரிகள், போட்டியாளர்கள் மற்றும் குரைக்கப் பட வேண்டிய பிற நாய்கள் என்றே பார்க்கிறது. எனவே, அவைகளின் மீது பாய்ந்து தன்னை வருத்திக் கொள்கிறது; அந்த பிரதிபிம்பங்களும் கூட பாயும் போது, அது கோபத்தால் பைத்தியம் பிடித்ததைப் போல ஆகி விடுகிறது. ஆனால், ஒரு ஞானமுள்ள மனிதன், எங்கும் தன்னையே கண்டு, சாந்தியுடனும், தன்னைச் சுற்றி இவ்வளவு பிரதிபிம்பங்கள் இருப்பதைக் கண்டு ஏன் மகிழ்ச்சியாகவும் கூட இருக்கிறான். தேவையற்ற துன்பங்களிலிருந்து உங்களைக் காக்கும், அப்படிப் பட்ட மனப்பாங்கைப் பெற நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.