azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

We need not set out to search for God. Wherever there is truth, God appears. Where Narayana appears, His consort Lakshmi, the goddess of plenty and prosperity, also appears. Hence if you want wealth, you have to take the first step! When you succeed in installing Lord Narayana in your heart, goddess Lakshmi follows her Master into your heart. There is plenty of grace that God can give you. But it is at a depth! Some effort is required to obtain it. If you need to fetch water from a well, you need to tie a rope to a bucket, lower it into the well, and draw the water out. You are neither tying the rope to the bucket nor lowering the bucket into the well, so water is therefore not reaching you. The rope to use is that of devotion. This rope must be tied to the vessel of your heart and lowered into the well of God's grace. What you receive from the well, when the water is drawn out, is the water of pure bliss. (Divine Discourse, May 24, 2002)
SPIRIT OF LOVE IS SPIRITUALITY. - BABA
நாம், இறைவனைத் தேடி அலைய வேண்டியதில்லை. எங்கு சத்தியம் இருக்கிறதோ, அங்கு இறைவன் ப்ரத்யக்ஷமாகிறான். ஸ்ரீமந் நாராயணன் தோன்றும் இடத்தில் , வளமைக்கும், சுபிட்சத்திற்கும் தேவியான லக்ஷ்மியும் கூடவே தோன்றுகிறாள். எனவே, உங்களுக்கு செல்வம் வேண்டும் என்றால், நீங்கள் தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் ! ஸ்ரீமந் நாராயணனை, இதயத்தில் பிரதிஷ்டை செய்து விடுவதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால், லக்ஷ்மி தேவியும் தனது நாயகனைத் தொடர்ந்து உங்கள் இதயத்திற்குள் வந்து விடுவாள். ஆண்டவனால் உங்களுக்கு அபரிமிதமான அருளை அளிக்க முடியும். ஆனால், அது ஒரு ஆழத்தில் உள்ளது ! அதைப் பெறுவதற்கு சிறிது முயற்சி தேவை. நீங்கள் ஒரு கிணற்றிலிருந்து நீரைப் பெற வேண்டும் என்றால், நீங்கள் ஒரு கயிறை ஒரு வாளியில் கட்டி, அதைக் கிணற்றில் இறக்கி, நீரை வெளியே கொண்டு வர வேண்டும். நீங்கள் கயிற்றை வாளியில் கட்டுவதும் இல்லை, வாளியை கிணற்றில் இறக்குவதும் இல்லை; எனவே தான் நீர் உங்களைச் சென்று அடைவதில்லை. பக்தியே நீங்கள் பயன்படுத்த வேண்டிய கயிறாகும். இந்தக் கயிறை உங்கள் இதயம் எனும் பாத்திரத்தில் கட்டி, இறை அருள் எனும் கிணற்றில் இறக்க வேண்டும். நீரை கிணற்றிலிருந்து இறைக்கும் போது, நீங்கள் பெறும் நீரே பரிசுத்தமான பேரானந்தம்.
ப்ரேமை உணர்வே ஆன்மீகம் - பாபா