azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The greatest wonder is that nobody knows or struggles to know themselves, but everyone spends a lifetime knowing about others. Your Self is subtler than water, air, and space. The Self must operate through the eye, so that you may see; it must move into the hand, so that it may hold; it must suffuse the feet, so that you may walk. The senses are inert materials; the ‘I’ must operate so that they may function. That “I” is Brahman, mistaken to be separate! The space in a pot and the space in a monastery are identical with the vast space in the sky above; only the disguises in the form of the pot and monastery keep up the illusion of separateness. The senses are the villains. They instill the delusion that you are the body. Curb them as the bull is curbed by the nose ring, the horse by the bit in the mouth, and the elephant by the goad. (Divine Discourse, 26-Oct-1963)
LOOK UPON YOUR BODY AS A SHRINE WHERE GOD IS INSTALLED.
DEDICATE ALL ACTIONS TO GOD. – BABA
மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், எவரும், தங்களைப் பற்றித் தெரிந்தோ அல்லது தெரிந்து கொள்ளப் போராடவோ செய்வதில்லை ; ஆனால், பிறரைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் ஒரு வாழ்க்கை முழுவதையும் செலவிடுகிறார்கள். உங்களது ஆத்மா, நீர், காற்று,மற்றும் ஆகாயத்தை விட நுண்ணியமானதாகும். ஆத்மா கண்கள் மூலம் இயங்க வேண்டும், அப்போது தான் தான் நீங்கள் பார்க்க முடியும்; அது கைகள் வழியாக செயல்பட வேண்டும், அப்போது தான், அவைகளால் பிடிக்க முடியும்; அது கால்களில் ஊடுருவி இருக்க வேண்டும், அப்போது தான் உங்களால் நடக்க முடியும். புலன்கள் உயிரற்றவையே; ‘’ நான்’’ என்பது இயங்க வேண்டும், அப்போது தான் அவை செயலாற்ற முடியும். தன்னை வேறான ஒன்றாகத் தவறாகக் கருதும், அந்த ‘’ நான் ‘’, பரப்ரம்மமே ! மண்பானையில் இருக்கும் இடைவெளியும், மடத்தில் இருக்கும் இடைவெளியும், மேலே இருக்கும் பரந்து விரிந்த ஆகாயத்தை ஒத்தவையே; மண்பானை, மடம் என்ற மாறு வேடங்களே, அவை தனித்தனியானவை என்ற மாயையை உருவாக்குகின்றன. புலன்களே வில்லன்கள். நீங்கள் உடலே என்ற மாயையை, அவைகளே உட்புகுத்துகின்றன. மாட்டை மூக்கணாங்கயிறு மூலமும், குதிரையைக் கடிவாளமிட்டும், யானையை அங்குசத்தைக் கொண்டும் அடக்குவதைப் போல, அவற்றைக் கட்டுப் படுத்துங்கள்.
உங்கள் உடலை, இறைவன் கொலு வீற்றிருக்கும் ஒரு சன்னிதியாகக் கருதுங்கள். அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அற்பணியுங்கள்- பாபா