azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

You can sail safe on the sea of worldly life (Samsara) if there are no leaks in the boat; but through the leaks of lust, anger, greed, delusion, pride and envy (kama, krodha, lobha, moha, mada, matsarya), the waters of worldliness will enter your boat and sink it, drowning you beyond redemption. To not allow water into the boat, fix all leaks. Then, you need not fear! You can benefit from all the chances Samsara gives to train the senses, widen your affection, deepen your experiences, and strengthen detachment. Do not fall in love with the world so much that your false attachment brings you back into this delusive amalgam of joy and grief. Unless you stand back a little, away from entanglement with the world, knowing that it is all a play whose director is God, you are in danger of being too closely involved. Use the world as a training ground for sacrifice, service, expansion of heart, and cleansing of emotions. (Divine Discourse, Mar 28, 1967)
ஸம்ஸாரம் எனும் சாகரத்தில், படகில் ஓட்டைகள் இல்லாமல் இருந்தால் தான், நீங்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும்; ஆனால், காம, க்ரோத, லோப,மோஹ, மத , மாத்ஸர்யம் எனும் ஓட்டைகளின் மூலம், உலகின் நீர், உங்கள் படகுக்குள் நுழைந்து, அதை மூழ்கடித்து , காப்பாற்ற முடியாத அளவு உங்களை ஆழ்த்தி விடும். படகில் , நீர் புகாதபடி செய்ய, எல்லா ஓட்டைகளையும், அடைத்து விடுங்கள். பின்னர், நீங்கள் அஞ்சத் தேவையில்லை ! ஸம்ஸாரம் தரும் அனைத்து வாய்ப்புக்களின் மூலம், புலன்களைப் பயிலுவித்து,உங்களது பரிவை விரிவாக்கி, உங்களது அனுபவங்களை ஆழ்மைப் படுத்தி, பற்றின்மையை பலப்படுத்தி, நீங்கள் பயன் பெற முடியும். உங்களது போலியான பற்றுதல், உங்களை இந்த சுக, துக்கம் எனும் மாயைக் கலவைக்குத் திரும்பக் கொண்டு விடும் அளவிற்கு, இந்த உலகத்துடன் ஆசை கொண்டு விடாதீர்கள். இந்த உலகச் சிக்கல் அனைத்தும், இறைவன் இயக்கும் நாடகமே என அறிந்து, நீங்கள், அதில் இருந்து விலகி, சற்று தள்ளி நின்றால் ஒழிய, இதனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டு விடும் அபாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த உலகை, தியாகம், சேவை, இதயத்தை விசாலப்படுத்துவது மற்றும் உணர்வுகளை தூய்மைப் படுத்துவது ஆகியவற்றிற்கான பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்துங்கள்.