azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The profession of a teacher is the noblest and the most responsible one in every country. If the teacher strays from the path of truth, the entire society will suffer. Hence teachers must make every effort to live their life uprightly. You have in your charge, looking up to you for guidance, innocent children who have no knowledge yet of the world and its ways. It is only when the teachers themselves are wedded to discipline and observe good habits that their pupils will be able to shape themselves into ideal individuals and citizens. Cultivate in your own heart the spirit of sacrifice, the virtues of charity and the awareness of Divinity. Then you will easily cultivate these in the hearts of the children. Try your best to reshape the present educational system. In the initial stages you will find this task very difficult and exhausting, but be assured, in time, you will find your task more easy. (Divine Discourse, Jul 25, 1978)
ஒரு ஆசிரியரின் பணியே, ஒவ்வொரு நாட்டிலும், மிகச் சீரிய மற்றும் பொறுப்பான ஒன்றாகும்.ஆசிரியர் சத்தியத்தின் பாதையிலிருந்து தவறி விட்டால், சமுதாயம் முழுவதுமே பாதிக்கப் பட்டு விடும். எனவே, ஆசிரியர்கள் தங்களது வாழ்க்கையை நேர்மையாக வாழ எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். உலகத்தைப் பற்றிய அறிவும், அதன் வழிகளையும் பற்றியும் இன்னும் அறிந்து கொள்ளாத, வழிகாட்டுதலுக்காக உங்களை எதிர் நோக்கியிருக்கும் அப்பாவியான குழந்தைகளை, உங்களது பொறுப்பில் நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆசிரியர்கள், தாங்களே கட்டுப்பாடுகளைப் பற்றி ஒழுகியும், நற்பழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் மட்டுமே,அவர்களது மாணவர்கள் தங்களை இலட்சிய மனிதர்கள் மட்டும் குடிமக்களாக உருவாக்கிக் கொள்ள முடியும். உங்களது சொந்த இதயங்களிலேயே, தியாகத்தின் உணர்வையும், தானத்தின் நற்பண்பையும், தெய்வீகத்தின் விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள், இவற்றை, குழந்தைகளின் இதயங்களிலும் எளிதாக வளர்த்து விடுவீர்கள்.தற்கால,கல்வி முறையை திருத்தி அமைக்க, உங்களால் முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். ஆரம்ப கட்டத்தில், இந்தப் பணி, கடினமானதாகவும், களைப்பூட்டுவதாகவும் தோன்றலாம்; ஆனால், காலப் போக்கில், உங்களது பணி மிகவும் எளிதானதாக ஆகி விடும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.