azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Where the mind is active, all the three worlds exist! Where there is no mind, nothing exists there. Mind is the main cause of your suffering and misery. To control the mind, you must keep your desires under check. Nature sets an ideal to the entire humanity to imbibe the spirit of sacrifice and lead a spiritual life. Our scriptures teach that the world is temporary and full of misery, so contemplate on God (Anityam Asukham Lokam Imam Prapya Bhajasva Mam). Ask yourself, despite knowing these truths, why are you not able to cultivate the spirit of sacrifice? Despite knowing the truth that the body is temporary, why are you still bound by desires? Since there is no end to desires, you are being subjected to endless misery. To get rid of your misery, you must follow the ideals of Nature. Nature is the best preacher. It exhorts you to cultivate love, compassion and spirit of sacrifice. (Divine Discourse, Aug 25, 1999)
SERVICE WILL BECOME MEANINGFUL ONLY WHEN IT MANIFESTS LOVE THAT ISSUES FROM SACRIFICE. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே ! மனம் செயலாற்றிக் கொண்டு இருக்கும் போது, மூன்று உலகங்களும் இருக்கும் ! மனம் இல்லை என்றால், அங்கு எதுவும் இருப்பதில்லை. மனமே உங்களது துன்பம் மற்றும் துயரத்திற்கு முக்கியமான காரணம். மனதைக் கட்டுப் படுத்த, நீங்கள் உங்களது ஆசைகளை அடக்கி வைக்க வேண்டும். இயற்கை, தியாக உணர்வை ஊட்டி, ஒரு ஆன்மீகமான வாழ்க்கையை நடத்துவதற்கு, மனித குலம் அனைத்திற்கும், ஒரு இலட்சியத்தை முன் வைக்கிறது. நமது மறைநூல்கள், இந்த உலகம் தாற்காலிகமானதும், துன்பம் நிறைந்ததும் ஆகும், எனவே, இறைவனை தியானியுங்கள் என போதிக்கின்றன ( அநித்யம், அசுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் ). இந்த சத்தியத்தை அறிந்திருந்த போதிலும், உங்களால் ஏன் தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள முடியவில்லை, என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த உடல் தாற்காலிகமானது என்ற உண்மையை அறிந்திருந்த போதிலும், நீங்கள் ஏன் இன்னும் ஆசைகளுக்குக் கட்டுண்டு இருக்கிறீர்கள் ? ஆசைகளுக்கு அளவே இல்லை என்பதால், நீங்கள் முடிவே அற்ற துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். உங்களது துன்பத்தை விட்டொழிப்பதற்கு, நீங்கள் இயற்கையின் இலட்சியங்களைப் பின்பற்ற வேண்டும். இயற்கையே மிகச் சிறந்த ஆசான்.அது, ப்ரேமை,கருணை மற்றும் தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள உங்களை, ஊக்குவிக்கிறது.
தியாகத்திலிருந்து வரும் ப்ரேமையை வெளிப்படுத்தும் போது மட்டும் தான்,சேவை அர்த்தமுள்ளதாகிறது. - பாபா