azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Your destiny is determined by your own actions. Through righteous actions, the mind is purified and a pure mind results in an awakening of jnana (spiritual wisdom). When you offer worship to God in the morning, you must offer your obeisance to whatever work you propose to do. You must pray to the presiding deity of Karma (action): "Let me do today only pure, purposeful and helpful actions." The circumstances of your birth are a result of past actions. Action (Karma), Birth (Janma), Righteousness (Dharma) and the secret of life (Marma) are all connected with Divinity (Brahman). They are like the four walls of a building. The first wall is Karma (action). One should not act as his fancies dictate. Before doing anything, you should consider whether it is proper or improper. Nothing should be done in haste on the impulse of the moment. Only then your actions will be sathwik and free from rajasic and tamasic stains. (Divine Discourse, May 3, 1987)
HABITS MOULD CHARACTER AND CHARACTER DECIDES ONE’S DESTINY. - BABA
உங்களது செயல்களைப் பொறுத்தே, உங்களது விதி நிர்ணயிக்கப் படுகிறது. தார்மீகமான செயல்களால், மனம் பரிசுத்தப் படுத்தப் படுகிறது; ஒரு பரிசுத்தமான மனதில் ஞானம் உதயமாகிறது. நீங்கள்,காலையில் இறைவனை வழிபடும் போது, நீங்கள் செய்ய உத்தேசித்திருக்கும் பணிகளுக்கு, நீங்கள் நமஸ்காரம் செய்ய வேண்டும். கர்ம தேவதைக்கு, நீங்கள், ‘’ இன்று நான், பரிசுத்தமான, குறிக்கோளுடைய மற்றும் பயனுள்ள பணிகளை மட்டுமே செய்வேனாகுக ‘’ எனப் பிரார்த்திக்க வேண்டும். உங்களது பிறப்பின் சூழ்நிலைகள், உங்களது கடந்த கால வினைகளின் ஒரு பலனாகும். பணி ( கர்மா), பிறப்பு ( ஜன்மா ), தர்மம் ( தர்மா ) மற்றும் வாழ்வின் மர்மம் ( மர்மா ), யாவும் தெய்வீகத்துடன் (ப்ரம்மன் ) இணைக்கப் பட்டவையே. அவை அனைத்தும், ஒரு கட்டிடத்தின் நான்கு சுவர்களைப் போன்றவை. முதலாவது சுவர் கர்மா. ஒருவர் தனது மனம் போன படி எல்லாம் செயலாற்றக் கூடாது. எதையாவது செய்யும் முன், நீங்கள், அது முறையானதா அல்லது முறையற்றதா என ஆலோசிக்க வேண்டும். எதையும், அவசரமாகவோ அல்லது அந்தத் தருணத்தின் உந்துதலின் படியோ செய்யக் கூடாது. அதன் பிறகே, உங்களது செயல்கள், ரஜோ மற்றும் தமோ குணங்களின் கறைகள் இன்றி, சாத்வீகமானதாக இருக்கும்.
பழக்கங்கள், குணநலனை உருவாக்குகின்றன; குணநலன் ஒருவரது தலைவிதியை முடிவு செய்கிறது - பாபா