azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

People desire fruits of good actions, without doing good actions! You wish to be saved from the consequences of evil deeds, but, ask yourself, do you refrain from bad actions? You feel happy when someone gives you something. But do you feel equally happy in giving to others? As you sow, so shall you reap, is a relentless law! No one can escape from the consequences of their actions, whether good or bad. To enjoy enduring happiness, you must fill your mind with pure thoughts and entertain fine feelings in your heart. Through good thoughts and good kindly actions, the heart gets pure and holy. In the journey of life, body is like a cart and heart is like a horse. Unless you feed the heart well, the journey cannot proceed properly. The heart must be fed with good fodder in the form of Satsang (good company), Sat Pravartana (good conduct) and good thoughts. Submit everything as an offering to God! (Divine Discourse, May 3, 1987)
FORGET ALL THE HARM DONE TO YOU BY OTHERS AND THE HELP YOU HAVE DONE TO OTHERS. - BABA
நற்கருமங்களைச் செய்யாமலேயே, மனிதர்கள், நற்கருமங்களின் பலன்களை விரும்புகிறார்கள் ! நீங்கள் தீய செயல்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றப் பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; ஆனால், உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், நீங்கள் தீய செயல்களிருந்து விலகி இருக்கிறீர்களா? உங்களுக்கு யாராவது எதாவது கொடுத்தால், நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால், அதைப் போலவே, நீங்கள், மற்றவர்களுக்குக் கொடுப்பதில் சந்தோஷப்படுகிறீர்களா? வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது இடையறாத விதியாகும் ! அவை நல்லவையோ அல்லது கெட்டவையோ அவர்களது கர்ம பலன்களிலிருந்து, எவரும் தப்ப முடியாது. நிலையான சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு, நீங்கள் உங்கள் மனதை தூய எண்ணங்களால் நிரப்பி, உங்கள் இதயத்தில் இதமான உணர்வுகளை ஏற்க வேண்டும். நற்சிந்தனைகள் மற்றும் கனிவான நற்செயல்களின் மூலம், இதயம் பரிசுத்தமானதாகவும், புனிதமானதாகவும் ஆகிறது. வாழ்க்கை எனும் பயணத்தில், உடல் ஒரு வண்டி போன்றது, இதயம் அதை இழுக்கும் ஒரு குதிரையைப் போன்றது. உங்கள் இதயத்திற்கு, நீங்கள் நல்ல தீனி அளிக்கவில்லை என்றால், இந்தப் பயணம் சரியாகச் செல்ல முடியாது. இதயம் எனும் குதிரைக்கு, ஸத்ஸங்கம் ( நல்லோர் நட்பு வட்டம்),ஸத்பரிவர்த்தனா ( நன்னடத்தை ) மற்றும் நன்சிந்தனைகள் என்ற தீனியை அளிக்க வேண்டும். அனைத்தையும், இறையார்ப்பணமாகச் செய்யுங்கள் !
பிறர் உங்களுக்கு இழைத்த அனைத்து தீங்கினையும், நீங்கள் ,பிறருக்கு அளித்த அனைத்து உதவிகளையும், மறந்து விடுங்கள் - பாபா