azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Your body is mortal, but life principle (Atma) is imperishable. To attain immortality, have unconditional love for God. Imagine you going to a goldsmith and asking him to make a jewelry of your choice. Your job is only to entrust gold with him with the condition that the weight and design should be to your specification. You must not interfere in how he converts your gold into the jewellery you want. If you stipulate conditions that he should not burn it in fire, or beat it with a hammer, how can you get the ornament that you ordered? Similarly, if you surrender your heart to God with conditions and reservations, how can you attain bliss? What He does with you is His business. Pray to God with unconditional surrender. When all that you possess — your body, mind and intellect are His gifts, where is the need for you to lay conditions? Surrender completely, God will grant you the bliss you deserve! (Divine Discourse, Nov 23, 1999)
உங்கள் உடல் நிலையற்றது; ஆனால் ஆத்மாவோ அழிவற்றது. அமரத்துவத்தைப் பெறுவதற்கு, இறைவன் பால் நிபந்தனையற்ற ப்ரேமை கொண்டிருங்கள். நீங்கள் ஒரு பொற்கொல்லரிடம் சென்று, உங்களுக்குப் பிடித்த ஒரு நகையைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களது வேலை, ஆபரணத்தின் எடையும் , வடிவமைப்பும், உங்களது குறிப்பளவுகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அவரிடம் தங்கத்தை கொடுப்பது மட்டும் தான். உங்களது தங்கத்தை அவர் எவ்வாறு நீங்கள் விரும்பும் ஆபரணமாக மாற்றுகிறார் என்பதில், நீங்கள் குறுக்கிடவே கூடாது. அவர் அதை நெருப்பில் காய்ச்சக் கூடாது அல்லது சுத்தியலால் அடிக்கக் கூடாது என்று எல்லாம் நிபந்தனைகளை விதிப்பீர்களானால், நீங்கள் செய்யுமாறு கூறிய ஆபரணத்தை, எவ்வாறு பெற முடியும்? அதைப் போலவே, நீங்கள் உங்களது இதயத்தை நிபந்தனைகள் மற்றும் தயக்கங்களுடன் இறைவனிடம் ஒப்படைத்தால், நீங்கள் ஆனந்தத்தை எவ்வாறு பெற முடியும்? உங்களை என்ன செய்கிறார் என்பது அவரது பொறுப்பு. நிபந்தனையற்ற சரணாகதி உணர்வுடன் இறைவனைப் பிரார்த்தியுங்கள். உங்களிடம் இருக்கும் அனைத்தும்- உடல், மனம் , புத்தி ஆகியவை இறைவன் அளித்த பரிசுகளே_ அப்படி இருக்கும் போது, நீங்கள் நிபந்தனைகள் விதிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? பரிபூரண சரணாகதி அடையுங்கள்; இறைவன் உங்களுக்கே உரித்த பேரானந்தத்தை அளித்திடுவான் !