azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people when faced with difficulties think that God is punishing them. It is a mistake to think so. God never punishes anybody. It is only the king who gives punishment, not God. God is love; He always gives only love. The punishment you suffer is the result of your own actions. God neither punishes you nor protects you. You are punished by your own sins and protected by your own good deeds. You may utilise light for writing inappropriate accounts or for reading the holy Ramayana. But light is not affected by what you do. Similarly God is the eternal witness. He is like the light, unaffected by your actions, good or bad. Be it pleasant or unpleasant, you have to face the consequences of your actions. So, do not indulge in bad actions. Always do good, be good, and see good. This is the way to God. Do not say, “I will try”; you must do it. (Divine Discourse, Apr 14, 1999.)
கஷ்டங்களை எதிர் கொள்ளும்போது, சில மனிதர்கள்,இறைவன் அவர்களை தண்டிக்கிறார் என நினைக்கிறார்கள். அவ்வாறு நினைப்பது தவறு. இறைவன் எவரையும் தண்டிப்பதில்லை. தண்டனை தருபவன் ஆள்பவர் தானே அன்றி, ஆண்டவன் இல்லை. அன்பே இறைவன்; அவன் அளிப்பது அன்பு மட்டுமே. நீங்கள் அனுபவிக்கும் தண்டனை, உங்களது சொந்த செயல்களின் விளைவே. இறைவன் உங்களை தண்டிப்பதும் இல்லை காப்பதும் இல்லை. நீங்கள் உங்களது சொந்த பாவங்களால் தண்டிக்கப் படுகிறீர்கள்; உங்களது சொந்த நற்செயல்களால் காக்கப் படுகிறீர்கள். நீங்கள் விளக்கைப் பொய்க் கணக்கு எழுதப் பயன்படுத்தலாம் அல்லது ஸ்ரீமத் ராமாயணத்தைப் படிக்கப் பயன்படுத்தலாம். ஆனால் விளக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்களோ , அதனால் பாதிக்கப் படுவதில்லை. அதைப் போலவே, இறைவன் நிரந்தர சாக்ஷிபூதமானவன். அவன், உங்களது, நல்ல அல்லது கெட்ட செயல்களால் பாதிக்கப் படாத விளக்கைப் போன்றவன். விருப்பமானவையோ அல்லது விரும்பத் தகாதவையோ, உங்களது செயல்களின் விளைவுகளை, நீங்கள் எதிர் கொண்டே ஆக வேண்டும். எனவே, தீய செயல்களில் ஈடுபடாதீர்கள். எப்போதும், நல்லவற்றையே செய்யுங்கள், நல்லவராக இருங்கள், நல்லவற்றையே காணுங்கள். அதுவே இறைவனை அடையும் வழி. ‘’ நான் முயற்சி செய்து பார்க்கிறேன் ‘’ என்று கூறாதீர்கள். நீங்கள் செய்தே ஆக வேண்டும்.