azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The eyes, the ears, the nose and the hand are the different limbs of the body. Body is a limb of the society. Society is a limb of mankind. Mankind is a limb of nature. Nature is a limb of God. It is because of the impact of modern education that man is misusing his limbs. The Vedas teach that all the education that one acquires should be utilised for the welfare of society. The Vedas say, Sarvaloka hite ratah (one should involve in the service of society). Sarvajnanopa sampannah (one should be a treasure of wisdom), and Sarva samudita gunaihi (one should cultivate all good qualities). After education, one should work for the welfare of society and the world at large. One should not have the narrow feeling that one’s family alone should be happy. Without the world, where is the family? Man and his family are dependent on society and the world at large. So, the individual and the family can be happy only when the world is safe and secure. (Divine Discourse, Apr 14, 1999)
கண்கள்,காதுகள்,மூக்கு மற்றும் கை, உடலின் வெவ்வேறு அங்கங்களே. உடல், சமுதாயத்தின் ஒரு அங்கமே. சமுதாயம், மனித குலத்தின் ஒரு அங்கமே. மனித குலம் இயற்கையின் ஒரு அங்கம். இயற்கை, இறைவனின் ஒரு அங்கம். நவீன கல்வி முறையின் தாக்கத்தினால் தான், மனிதன் தனது அங்கங்களை தவறாகப் பயன்படுத்துகிறான். ஒருவர் பெறும் அனைத்து கல்வியும் சமுதாயத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப் பட வேண்டும் என வேதங்கள் போதிக்கின்றன. வேதங்கள், ஸர்வ லோக ஹித ரதஹ ( ஒருவர் சமுதாயத்தின் சேவையில் ஈடுபடவேண்டும்) என்கின்றன. ஸர்வஞானோப ஸம்பன்னஹ ( ஒருவர் ஞானத்தின் ஒரு பொக்கிஷமாக இருக்க வேண்டும்), மற்றும் ஸர்வ ஸமுதித குணைஹி ( ஒருவர் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்). கல்விக்குப் பிறகு, ஒருவர், சமுதாயத்தின் நலனுக்காகவும், உலகம் அனைத்திற்காகவும் உழைக்க வேண்டும். தனது குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று குறுகிய உணர்வினைக் கொண்டு இருத்தல் கூடாது. உலகம் இல்லை எனில் குடும்பம் ஏது? மனிதனும், அவனது குடும்பமும், சமுதாயத்தையும், ஏன் உலகனைத்தையுமே சார்ந்ததாகும். எனவே, தனி மனிதனும், குடும்பமும், உலகம் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருந்தால் மட்டும் தான் சந்தோஷமாக இருக்க முடியும்.