azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

In this journey of life, first and foremost, you need to have self-confidence. Today people suffer because of lack of self-confidence. There may be a few difficulties in your way, but do not be unduly perturbed. You should face all hardships with courage and conviction. Only then you will attain true happiness. If you have total faith in God, you will be able to overcome all difficulties. Never blame God for your difficulties. You are bound to face the consequences of your actions, whether good or bad! But if you earn God’s grace, even difficult circumstances will yield good. So develop faith in God more and more. You trust your friend whom you met only a few years ago, but not God who is with you, in you, and around you, throughout your life. You trust the washerman and part with your valuable clothes. Why then is it hard for you to have firm faith and trust in the omnipresent, omnipotent, and omniscient all-powerful Divinity? (Divine Discourse, Feb 14, 1999)
AN ASPIRANT MUST BEAR ALL CIRCUMSTANCES WITH PATIENCE;
THAT IS THE MOST BENEFICIAL PATH. - BABA
இந்த வாழ்க்கைப் பயணத்தில்,முதன் முதலில், உங்களுக்குத் தன்னம்பிக்கை மிகவும் தேவை.இன்று மனிதர்கள் தன்னம்பிக்கை இல்லாததால், துன்பப் படுகிறார்கள்.உங்களது பாதையில் ஒரு சில கஷ்டங்கள் இருக்கலாம்;ஆனால், நீங்கள், தேவைக்கு அதிகமாக கலக்கம் அடையாதீர்கள்.நீங்கள் அனைத்து கஷ்டங்களையும், தைரியமாகவும், மன உறுதியோடும் எதிர் கொள்ள வேண்டும். அதன் பிறகே, நீங்கள் உண்மையான சந்தோஷத்தைப் பெற முடியும். உங்களுக்கு இறைவன் பால் முழு நம்பிக்கை இருக்குமானால், நீங்கள் அனைத்து கஷ்டங்களையும் சமாளிக்க முடியும். உங்களது கஷ்டங்களுக்கு, இறைவனை ஒருபோதும் குறை கூறாதீர்கள். அவை நல்லவையோ அல்லது கெட்டவையோ, உங்களது செயல்களின் பலன்களை நீங்கள் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் ! ஆனால் , நீங்கள் இறை அருளைப் பெற்று விட்டால், கடினமான சந்தர்ப்பங்கள் கூட நல்லவற்றையே அளிக்கும். எனவே, இறைவன் பால் மேன்மேலும் நம்பிக்கையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். சில வருடங்களுக்கு முன்பு தான் சந்தித்த நண்பரை நீங்கள் நம்புகிறீர்கள்; ஆனால் உங்கள் வாழ்க்கை முழுவதும், உங்களுடனும், உங்களுள்ளும், உங்களைச் சுற்றியும் உள்ள இறைவனை நம்புவதில்லை. நீங்கள் வண்ணானை நம்பி, உங்களது விலையுயர்ந்த துணிகளை ஒப்படைக்கிறீர்கள். பின், அங்கிங்கெனாபடி எங்கும் நிறைந்தவனும், அளவற்ற ஆற்றல் படைத்தவனும், அனைத்தும் அறிந்தவனும், ஸர்வ வல்லமை பொருந்தியவனும் ஆன இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைப்பது உங்களுக்கு ஏன் கடினமாக இருக்கிறது?
ஒரு ஆன்மீக சாதகர், அனைத்து சந்தர்ப்பங்களையும், பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும்,அதுவே, மிகவும் பயனளிக்கும் பாதையாகும்- பாபா