azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

In the present times, anxiety and fear are spreading amongst people and righteousness (dharma) is receiving a setback. The world can win back peace and harmony only when people are persuaded to practice the ideals laid down in the scriptures (Vedas) which serve as beacon-lights to guide mankind aright. All activities in your daily living (karma) are really speaking the practice of dharma. The Upanishads give us guidance on what must be done and what must be avoided in the journey of life. For involving oneself in good activities, spiritual wisdom is an essential prerequisite. They direct us to revere the mother as God, father as God, preceptor as God, and also the guest as God. They also warn us that truth and righteousness should not be neglected. So there are both positive and negative instructions — follow these counsels, not others. Accept whatever conduces to your progress in goodness; avoid the others. (Sathya Sai Vahini, Ch 11, ‘Values in Vedas’)
UNIVERSAL PEACE DEPENDS ON THE PEACE OF THE SOCIETY,
WHICH IN TURN DEPENDS ON THE PEACE OF THE INDIVIDUAL. - BABA
தற்காலத்தில், பதட்டமும், பயமும், மனிதர்களிடையை பரவிக்கொண்டு இருக்கிறது; தர்மத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மனித குலத்தை நல்வழியில் நடத்துவதற்கான, கலங்கரை விளக்கம் போலத் திகழும் வேதங்கள் வகுத்துள்ள இலட்சியங்களைப் பின்பற்றுவதற்கு, மக்களை இணங்க வைத்தால் மட்டுமே, உலகம்,சாந்தி மற்றும் இசைவைத் திரும்பப் பெற முடியும். உங்கள் அன்றாட வாழ்க்கையின் அனைத்து கர்மாக்களும், உண்மையில் தர்மத்தைக் கடைப்பிடிப்பதைத் தான் பேசுகின்றன. உபநிஷதங்கள், வாழ்க்கைப் பயணத்தில், எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலை அளிக்கின்றன. ஒருவர் தன்னை, நற்கர்மங்களில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு, ஆன்மீக ஞானம் ஒரு அத்தியாவசியமான முன் முதல் தேவையாகும். அவை, நாம் தாயைக் கடவுளாகவும், தந்தையைக் கடவுளாகவும், குருவைக் கடவுளாகவும், விருந்தினரையும் கூடக் கடவுளாகவும் மதிக்க வேண்டும் என வழி காட்டுகின்றன. நாம் சத்தியத்தையும், தர்மத்தையும்,புறக்கணிக்கக் கூடாது என அவை எச்சரிக்கின்றன. எனவே, அதில், நேரான மற்றும் எதிர்மறையான அறிவுரைகள் உள்ளன – இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள், பிறவற்றை அல்ல. எவை எல்லாம்,நல்லவற்றில் நீங்கள் முன்னேறுவதற்கு உகந்தவையோ அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தவிர்த்து விடுங்கள்.
பிரபஞ்ச மயமான சாந்தி, சமுதாயத்தின் சாந்தியைச் சார்ந்திருக்கிறது; அது பதிலுக்கு , தனி மனித சாந்தியைச் சார்ந்திருக்கிறது- பாபா