azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

There are three types of people who approach the Lord: a) the eagle type, which swoops down on the target with a greedy swiftness and suddenness that, by its very impact, fails to secure the object coveted; b) The monkey type, which flits hither and thither, from one fruit to another, unable to decide which is tasty; c) and the ant type, which moves steadily but slowly toward the desirable object. The ant does not hit the fruit hard and make it fall away, nor does it pluck all the fruits it sees; it appropriates just as much as it can assimilate, and no more. Do not fritter away the time allotted to you for sojourning on Earth in foolish foppery and fault finding, which always keep you outdoors. When are you going to walk indoors into the warmth and quiet of your own interior? Now and then, retire into solitude and silence; experience the joy derivable only from within. (Divine Discourse, Oct 26, 1961)
AN ASPIRANT MUST BEAR ALL CIRCUMSTANCES WITH PATIENCE;
THAT IS THE MOST BENEFICIAL PATH. - BABA
இறைவனை அணுகுபவர்கள் மூன்று விதமானவர்கள்; 1) தன்னுடைய இரையின் மீது ஒரு பேராசையான வேகத்துடனும், திடீரெனவும் பாய்ந்து, அந்தத் தாக்கத்தினாலேயே, தனக்குக் கிடைத்ததைக் கைப்பற்றத் தவறி விடும் கழுகைப் போன்றவர்கள் ; 2) ஒரு பழத்திலிருந்து, மற்றொன்றிற்கும், இங்கும் , அங்கும் தாவிக் குதித்து, எது சுவையானது எனத் தீர்மானிக்க முடியாமல் இருக்கும் குரங்கைப்போன்றவர்கள்; 3) தனக்கு வேண்டிய பொருளை நோக்கி, சீராகவும், மெதுவாகவும் நகரும் எறும்பைப் போன்றவர்கள். எறும்பு, பழத்தை பலமாக அடித்து, அதை விழச் செய்வதும் இல்லை, தான் பார்க்கும் எல்லாப் பழத்தையும் பறிப்பதும் இல்லை; தன்னால் எவ்வளவு உட்கிரகிக்க முடியுமோ, அதற்கு மேல் அல்லாது, அந்த அளவு மட்டுமே சேர்த்து வைத்துக் கொள்கிறது. பூமியில் வாழ்வதற்கு உங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள காலத்தை, உங்களை எப்போதும் வெளி உலகத்திலேயே வைத்திருக்கும்,அறிவற்ற நடத்தை மற்றும் குறை கண்டுபிடிப்பதிலேயே வீணடித்து விடாதீர்கள். இதமான மற்றும் அமைதியான , உங்களது சொந்த உள்ளார்ந்த அந்தராத்மாவிற்குள் எப்போது பிரவேசிக்கப் போகிறீர்கள்? அவ்வப்போது, தனிமையிலும், அமைதியான சூழ்நிலையிலும் ஒதுங்கி இருங்கள்; உள்ளிருந்து மட்டுமே பெறக்கூடிய ஆனந்தத்தை அனுபவியுங்கள்.
ஒரு ஆன்மீக சாதகர்,எல்லா சந்தர்ப்பங்களையும்,பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும்; அதுவே மிகவும் பயனளிக்கும் பாதையாகும்- பாபா