azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Take the Lord to be your father or mother, but only as a first step leading to a lasting relationship that ends in merging with the absolute. Do not pause on the steps; enter the mansion to which they lead. The connection with the soul (Atmasambandha) is an everlasting and unchanging association. As a first step, you offer flowers, lamp, incense to worship the attributeful form. Soon, your devotion should move on to newer offerings that are purer and more valuable and worthier of your Lord. No one sticks to the slate for long; you too should feel that you must place before the Lord something more lasting than flowers and incense. You must feel like purifying yourself and making your entire life one fragrant flame. That is real worship, real devotion. Do not come to Me with hands full of trash, for how can I then fill them with Grace? Come with empty hands and carry away My treasure, My love. (Divine Discourse, Oct 26, 1961)
இறைவனை, உங்களது தந்தை அல்லது தாயாக ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், அந்த பரப்ரம்மத்துடன் ஒன்றரக் கலந்து விடும் ஒரு நிரந்தர உறவிற்கு இட்டுச் செல்லும் ஒரு முதல் படியாக மட்டுமே இது இருக்கட்டும். படிகளிலேயே நின்று விடாதீர்கள்; அவை இட்டுச் செல்லும் மாளிகைக்குள் நுழையுங்கள். ஆத்மாவுடனான உறவு ( ஆத்ம சம்பந்த), என்றும் நிலைத்திருக்கும்,மாறாத உறவாகும். முதல் படியாக, சகுண ரூபத்தை வழிபட, நீங்கள் மலர்கள், தீபம், ஊதுபத்தி ஆகியவற்றை அர்ப்பணிக்கிறீர்கள். விரைவில், உங்களது பக்தி, மேலும் பரிசுத்தமான, மதிப்பு வாய்ந்த, உங்களது இறைவனுக்கு உகந்த,புதிய அர்ப்பணிப்புக்களுக்கு உயர வேண்டும். எவரும் சிலேட்டுப் பலகையில் எழுதுவதிலேயே வெகு காலம் நிலைத்திருப்பதில்லை; நீங்களும் கூட, உங்களது இறைவன் முன், மலர்கள் மற்றும் ஊதுபத்திகளை விட, அதிக காலம் நிலைத்திருக்கும் ஏதோ ஒன்றை அர்ப்பணிக்க வேண்டும் என உணர வேண்டும். நீங்கள், உங்களையே பரிசுத்தப் படுத்திக் கொண்டு, உங்களது வாழ்க்கை முழுவதையுமே ஒரு நறுமண ஜோதியாக ஆக்க வேண்டும் என உணர வேண்டும். அதுவே உண்மையான வழிபாடும், உண்மையான பக்தியும் ஆகும். உங்கள் கைகள் நிறைய குப்பையை நிரப்பிக் கொண்டு, என்னிடம் வராதீர்கள்; பின் நான் அப்படி அவற்றை எனது அருளால் நிரப்ப முடியும் ? காலியான கரங்களுடன் வாருங்கள்; எனது பொக்கிஷமான, எனது ப்ரேமையை எடுத்துச் செல்லுங்கள்.