azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

One of the handicaps that have to be overcome is weak faith in oneself (Avishwasam). Today you gladly and willingly place all faith in the body and its accessories but not in your inner motivator, the charioteer. In particular, youth today have faith in unreal, transient, momentary pleasures and pastimes. They have no knowledge of the eternal, the changeless, and the ever-blissful. Precious years of life are thus wasted in worthless pursuits. That is why your faith falters when even a minor calamity happens! Contemplate deeply on the impermanence of wealth, fame, worldly friendship, and so on. Cultivate faith in the value of service; believe that love can overcome hatred. Have faith in righteousness and the moral life. This is called righteous living (dharma). Never stray into wrong paths, enticed by sensual desires and plans for self-aggrandisement. (Divine Discourse, Dec 7, 1978)
BE LIKE A STAR, WHICH NEVER WAVERS FROM THE CRESCENT, BUT IS FIXED, IN STEADY FAITH. - BABA
பலஹீனமான தன்னம்பிக்கை ( அவிஸ்வாஸம் ) ஒருவர் வெல்ல வேண்டிய குறைகளில் ஒன்றாகும்.இந்நாளில், நீங்கள் மகிழ்ச்சியுடனும், விருப்பத்துடனும், உடல் மற்றும் அதன் அங்கங்களில் அனைத்து நம்பிக்கையையும் வைக்கிறீர்கள்; ஆனால் உங்கள் அந்தராத்ம சாரதியாக உந்துபவர் மீது நம்பிக்கை வைப்பதில்லை. குறிப்பாக, இளைஞர்கள் இன்று, பொய்மையான, நிலையற்ற மற்றும் கண நேரமே நிலைத்திருக்கும் சுகங்கள் மற்றும் பொழுது போக்குகளில் நம்பிக்கை வைக்கிறார்கள். நிலையான, மாறுதலற்ற, நிரந்தர ஆனந்தமாக இருப்பவற்றைப் பற்றிய எந்த ஞானமும் அவர்களுக்கு இல்லை. வாழ்க்கையின் விலை மதிக்க முடியாத வருடங்கள், இவ்வாறான பயனற்ற தேடுதல்களில் வீணடிக்கப் படுகின்றன. அதனால் தான், உங்களது நம்பிக்கை, ஒரு சிறிய கஷ்டம் வந்தால் கூடத் தடுமாறி விடுகிறது ! செல்வம், புகழ், உலகியலான நட்பு போன்றவற்றின் நிலையாமையைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். சேவையின் மதிப்பின் மீது, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்; ப்ரேமை, த்வேஷத்தை வெல்ல முடியும் என்பதை நம்புங்கள். தர்மம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை மீது நம்பிக்கை கொண்டு இருங்கள். இது தான் தர்மம் எனப்படுகிறது. புலன்களின் ஆசைகள் மற்றும் தற்புகழ்ச்சிக்கான திட்டங்களால் கவரப்பட்டு, தவறான பாதையில் ஒருபோதும் வழி மாறிச் சென்று விடாதீர்கள்.
பிறைச் சந்திரனிடமிருந்து பிறழாது, ஒரே இடத்தில்,நிலையான நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு நட்சத்திரம் போல இருங்கள் - பாபா