azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The atheists (nastikas) are afflicted with a fever that spoils their sense of taste; they find everything bitter. A believer (astika) feels the taste as is: bitter as bitter, sour as sour, sweet as sweet. But the person of realisation (yastika) experiences all life events as sweet, filled with the Lord’s Grace. Prahlada was such a person; he was beaten, trampled upon, and cast into fire and water, but he tasted only sweetness at all times. He overcame every calamity with the reinforcement derived from the name Narayana in the heart. There is a secret spring in the heart that will well up when the name is uttered and that will slake your thirst. When in difficulty, pray for His guidance before jumping in any direction. Humans advice only as far as their cleverness goes, but the Lord will reveal to you the way out of every dilemma. Ask the Lord directly and He will not only answer you but also redeem you! (Divine Discourse, Mar 10, 1962)
NEVER FEEL DEJECTED. PRAY EARNESTLY AND THE LORD WILL MANIFEST
WHEREVER YOU ARE,WHENEVER YOU YEARN FOR HIM. - BABA
நாஸ்திகர்கள் ( நாஸ்திகா ), அவர்களது சுவை உணர்வை பாதிக்கும் ஒரு ஜூரத்தால் பீடிக்கப் பட்டு உள்ளார்கள்; அவர்களுக்கு அனைத்தும் கசப்பாகவே தெரிகிறது. ஒரு ஆஸ்திகர் ( ஆஸ்திகா) ஒரு சுவையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே, அதாவது கசப்பை, கசப்பாகவும்,புளிப்பை, புளிப்பாகவும், இனிப்பை, இனிப்பாகவும் உணருகிறார். ஆனால், ஒரு ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்தவர் ( யாஸ்திகா ) வாழ்க்கையின் அனைத்து நிகழ்ச்சிகளையும், இறை அருளால் நிரம்பிய இனிமையானவைகளாகவே அனுபவிக்கிறார். பக்த பிரஹலாதன் அப்படிப் பட்ட ஒருவன்.; அவன் அடிக்கப்பட்டான், மிதிக்கப் பட்டான், நெருப்பிலும், நீரிலும் வீசி எறியப் பட்டான், ஆனால், எல்லாக் காலங்களிலும், அவன் இனிமையை மட்டுமே சுவைத்தான். அவன், ஒவ்வொரு பேராபத்தையும், இதயத்தில் ஸ்ரீமந் நாராயணனின் நாமத்திலிருந்து கிடைத்த வலுவூட்டலைக் கொண்டு, கடந்து வந்தான். இதயத்தில் ஒரு ரகசியமான ஊற்று ஒன்று உள்ளது;இறைவனது திருநாமத்தை உச்சரித்த உடனேயே அது பொங்கி எழுந்து வந்து, உங்களது தாகத்தைத் தணித்து விடும். துன்பத்தில் இருக்கும் போது, எந்த திசையிலும் குதிப்பதற்கு முன்பு, இறைவனது வழி காட்டுதலுக்காகப் பிரார்த்தியுங்கள். மனிதரது ஆலோசனை அவர்களது புத்திசாலித்தனம் செல்லும் வரை தான்; ஆனால் இறைவன் ஒவ்வொரு குழப்பத்திலும், அதிலிருந்து மீள்வதற்காக வழியை உங்களுக்குக் கட்டுவான். இறைவனை நேராகக் கேளுங்கள்; அவன் உங்களுக்கு பதில் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், உங்களைக் காத்திடவும் செய்வான் !
ஒரு போதும், மனம் தளராதீர்கள்.ஆத்மார்த்தமாகப் பிரார்த்தியுங்கள். அவனுக்காக ஏங்கும்போது, நீங்கள் எங்கிருந்தாலும், அங்கு, இறைவன் ப்ரத்யக்ஷமாவான்- பாபா