azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

A single household now has ten factions and parties. Those who cannot reform their own homes have started reforming the country and are advising others about cooperation and harmonious living. Knowledge of the Atma as the very basis of all beings is now forgotten, and that is the cause for all the unrest, confusion, and moral crisis today! Decline in the discipline of constant thought of the Lord (namasmarana) is the root-cause of the decline of this country. It is to awaken the sleeping and communicate this message to them that God descends. If anyone calls you weak, do not believe it. You have intelligence, discipline, spiritual capacity, consciousness of others’ excellences, awareness of your faults, and eagerness to improve yourself — then how can you be called weak? Remember, a prayerful life will not yield to the fury of passion; it will be a source of strength and cooperation. I bless that all of you may have lives full of joy and peace. (Divine Discourse, Dec 09, 1963)
DESIRES ARE BORN OF GREED. WHEN GREED IS WEAKENED MORE AND MORE,
DISCONTENT DECLINES IN EQUAL MEASURE. - BABA
இன்று ஒரே குடும்பத்திற்குள் பத்து பிரிவுகளும், கோஷ்டிகளும் இருக்கின்றன. தங்களது சொந்த இல்லங்களையே சீர்படுத்த முடியாதவர்கள், நாட்டை சீர்படுத்தவும், மற்றவர்களுக்கு கூட்டுறவு மற்றும் இசைவான வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்தவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அனைத்து ஜீவராசிகளின் ஆதாரமே ஆத்மா தான் என்பது இப்போது மறக்கப் பட்டு விட்டது; இன்றைய, அனைத்து அமைதியின்மை, குழப்பம் மற்றும் ஒழுக்கச் சீர்கேட்டிற்கு காரணம் இதுவே ! இடையறாத இறைநாமஸ்மரணை என்ற கட்டுப்பாடு குறைந்து விட்டதே, இந்த நாட்டின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். தூங்கிக் கொண்டு இருப்பவர்களைத் தட்டி எழுப்பவும், இந்த உபதேசத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் தான், இறைவன் அவதாரம் எடுத்து இற(ர)ங்கி வருகிறான். யாராவது உங்களை பலஹீனமானவர்கள் என்று சொன்னால், அதை நம்பாதீர்கள். உங்களிடம் புத்தி, கட்டுப்பாடு,ஆன்மீகத் திறன், மற்றவர்களது சிறப்பைப் பற்றிய உணர்வு,உங்களது குறைகளைப் பற்றிய விழிப்புணர்வு, உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் ஆகியவை இருக்கும் போது, உங்களை பலஹீனமானவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? ஒரு பிரார்த்தனை மயமான வாழ்க்கை, கட்டுக் கடங்காத உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது; அதுவே மனஉறுதி மற்றும் ஒத்துழைப்பின் ஒரு மூலாதாரமாக இருக்கும். நீங்கள் அனைவரும் சாந்தி, சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை பெற வேண்டும் என நான் ஆசீர்வதிக்கிறேன் !
ஆவல்கள், பேராசையிலிருந்து பிறக்கின்றன; பேராசையின் வலிமை குறையக் குறைய, அதிருப்தியும் அதே அளவு குறைந்து விடுகிறது - பாபா