azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Let Me tell you - the greatest beauty aid for women is virtue! Attach importance to nishta (discipline and steadiness) and not to nashta (breakfast or food)! You can miss food but not discipline. Live a regulated disciplined life from now on; make it a habit and an armour that will protect you from harm. Pray to God and recite His name or meditate on His glory for some fixed period of time every day; you will find it amply rewarding. Don’t say, “Let me have a taste of the reward, and then I shall start the spiritual practice.” Practise, and the experience will follow; it must follow. If you desire that others honour you, you should honour them too. If others must serve you, serve them first. Love begets love; trust engenders trust. Self-aggrandizement and selfishness will bring disaster. As a matter of fact, no joy can equal the joy of serving others. (Divine Discourse, Dec 9, 1963.)
நான் கூறுவதைக் கவனியுங்கள்_ ஒரு பெண்ணுக்கு மிகச் சிறந்த அலங்காரம் நல்லொழுக்கமே ! நிஷ்டாவிற்கு ( கட்டுப்பாடு மற்றும் நிலைகுலையாமை) முக்கியத்துவம் கொடுங்கள்; நாஷ்தாவிற்கு ( காலைச் சிற்றுண்டி அல்லது உணவு) அல்ல ! நீங்கள் உணவைக் கூட விட்டு விடலாம் ஆனால், கட்டுப்பாட்டை அல்ல. இப்போதிலிருந்து, ஒரு ஒழுங்குக் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழுங்கள்; அதை ஒரு பழக்கமாகவும், உங்களை எந்தத் தீங்கிலிருந்தும் காக்கும் ஒரு கவசமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில், இறைவனைப் பிரார்த்திப்பது மற்றும் இறை நாமஸ்மரணை அல்லது அவனது மஹிமையை தியானிப்பதைச் செய்யுங்கள் ; அது மிகவும் பயனளிப்பதைக் காண்பீர்கள். ‘’ முதலில் பயனை நான் அனுபவிக்கட்டும், பின்னர் நான் ஆன்மீக சாதனையைத் தொடங்குகிறேன்’’ என்று கூறாதீர்கள். கடைப்பிடியுங்கள், அனுபவம் அதனைத் தொடர்ந்து வரும்; தொடர்ந்து வந்தே ஆக வேண்டும். மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களும் கூட அவர்களை மதிக்க வேண்டும். பிறர் உங்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்றால், முதலில் நீங்கள் அவர்களுக்கு சேவை ஆற்றுங்கள். ப்ரேமை, ப்ரேமையைத் தோற்றுவிக்கிறது; நம்பிக்கை, நம்பிக்கைக்குக் காரணமாகிறது. தற்புகழ்ச்சியும், தன்னலமும், பேராபத்தைக் கொண்டு வரும். உண்மையில் பிறருக்கு சேவை ஆற்றுவதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு ஈடான ஆனந்தம் எதுவும் இல்லை.