azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

When you suspect the strength of the foundation of a house, you are afraid to enter it; when you suspect the skill of the manufacturer, you are nervous to ride in the car. The present times have become an age of fear, anxiety and ashanti (absence of peace) because people do not have deep faith in the Creator. Bhishma, Shankara and other Jnanis (wise ones) knew that the Lord is the basis (Aadhara) for all creation and had no fear at all. In recent times, Mahatma Gandhi relied on the Lord's Grace and His Might and won freedom for the Nation. Know that the Lord is the unseen foundation on which your life is built. He is your source, sustenance and strength. Without His Will, no leaf can turn, no blade of grass can quiver. What firmer foundation can you desire than this? Having known the Lord, the Omnipotent Power as the mainspring of your life, you should not fear any more! (Divine Discourse, Dec 8, 1964)
WHY FEAR WHEN I AM HERE? - BABA
ஒரு வீட்டின் அஸ்திவாரத்தின் வலிமையில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், அதற்குள் நுழைய நீங்கள் அஞ்சுகிறீர்கள்; தயாரிப்பாளரின் திறனில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்தக் காரில் பயணம் செய்வது உங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது. தற்காலம், அச்சம், கவலை மற்றும் அசாந்தியின் காலமாக ஆகி விட்டது; ஏனெனில் மக்களுக்கு படைத்தவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இல்லை. பீஷ்மர், ஆதிசங்கரர் மற்றும் இதர ஞானிகள், படைப்பு அனைத்திற்கும் ஆதாரம் ஆண்டவனே என்று அறிந்திருந்ததால், அவர்களுக்கு அச்சமே இருந்தது இல்லை. சமீப காலத்தில், மஹாத்மா காந்தி இறைவனது அருள் மற்றும் அவனது வலிமை மீது நம்பிக்கை வைத்து, நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார். ஆண்டவனே, உங்கள் வாழ்க்கை எனும் கட்டிடத்தின் கண்ணுக்குப் புலப்படாத அஸ்திவாரம் என்பதை அறிந்திருங்கள். அவனே உங்களின் ஆதாரமும், ஆஹாரமும்,ஆற்றலும் ஆவான். அவனது ஸங்கல்பம் இன்றி, ஒரு இலை கூட அசைய முடியாது, ஒரு புல் கூட ஆட முடியாது. இதை விட உறுதியான வேறு எந்த அஸ்திவாரத்தை நீங்கள் நாட முடியும்? ஸர்வ வல்லமை பொருந்திய அந்த இறைவனே, உங்களது வாழ்க்கையின் பிரதான சக்தி என அறிந்த பின், நீங்கள் இனி மேல் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை !
யாமிருக்க பயமேன் - பாபா