azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

A farmer desirous of raising crop must remove all weeds from his field. All varieties of weeds adversely affect the crop. Hence weeding is an essential pre-condition to get a good yield. Similarly, a spiritual aspirant eager to realise bliss (Atmananda), must remove from one’s heart the various manifestations of rajo and tamo gunas (qualities of passion and dullness) in the form of malice, desire, greed, anger, hatred and jealousy. These six types of enemies of man are the children of rajo and tamo gunas. None can experience the joy and bliss of the soul as long as these weeds are present. The entire world is a manifestation of the three gunas. Of these three, rajo and tamo gunas are the source of all trouble, sorrow, grief and problems. The six attributes of tamo guna are sleep, drowsiness, fear, anger, laziness and inertia. Hence Lord Krishna asked Arjuna to remove the rajo and tamo gunas from his heart. (Divine Discourse, Sep 12, 1984)
ANGER BREEDS DANGER. - BABA
ஒரு விவசாயி பயிரை வளர்க்க வேண்டும் என விரும்பினால்,அவரது நிலத்திலிருந்து அனைத்து களைகளையும் நீக்க வேண்டும்.எல்லா விதமான களைகளும், பயிருக்கு கெடுதலேயே விளைவிக்கின்றன. எனவே, களை எடுப்பது, ஒரு நல்ல மகசூலைப் பெறுவதற்கு அத்தியாவசியமான ஒரு முன் நிபந்தனையாகும். அதைப் போலவே, ஆத்மானந்தத்தை உணர ஆவலாக இருக்கும் ஒரு ஆன்மீக சாதகர், தனது இதயத்திலிருந்து ரஜோ மற்றும் தமோ குணங்களின் வெளிப்பாடுகளான, காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யங்களை நீக்க வேண்டும். மனிதனின் இந்த ஆறு விதமான விரோதிகள், ரஜோ மற்றும் தமோ குணங்களின் பிள்ளைகளே. இந்த களைகள் இருக்கும் வரை, எவரும் ஆத்மானந்தத்தை அனுபவிக்க இயலாது. உலகனைத்தும் முக்குணங்களின் ஒரு வெளிப்பாடே. இந்த மூன்றிலும், ரஜோ மற்றும் தமோ குணங்களே, அனைத்து துன்பம், துயரம், சோகம் மற்றும் பிரச்சனைகளுக்கு மூலாதாரமாகும். தூக்கம், மயக்கம்,பயம்,கோபம், சோம்பேறித்தனம் மற்றும் சும்மா இருத்தல் ஆகியவை தமோ குணத்தின் ஆறு பண்புகளாகும். எனவே தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,அர்ஜூனனை, ரஜோ மற்றும் தமோ குணங்களை, அவரது இதயத்திலிருந்து நீக்கி விடுமாறு கூறினார்.
ஆத்திரம், ஆபத்தை விளைவிக்கிறது - பாபா