azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

When we are hungry, we eat food to satisfy our hunger! It takes about two hours for the food in the mouth to go to the stomach, get digested and yield strength and nourishment to the body. Similarly, there may be a time gap between actions and their consequences. A seed does not become a tree as soon as you sow it. The seed first germinates, becomes a sapling, and then grows into a tree in due course of time. The entire tree is within a tiny seed. You only see the seed, not the entire tree hidden in it. Similarly, you must remember that your future is contained in the actions performed by you in the present. You imagine your future and wait for it. There is no need to wait for it because your future lies in your present! Your present thoughts, words and deeds determine your future. Therefore make the present sacred, sublime, and purposeful. (Divine Discourse, Apr 22, 1993.)
AS IS THE SEED, SO IS THE FRUIT. UNDERTAKE SACRED ACTIONS NOW SO AS
TO RECEIVE GOOD RESULTS LATER. - BABA
நாம் பசியோடு இருக்கும் போது, அந்தப் பசியைத் தீர்ப்பதற்கு உணவு அருந்துகிறோம் ! வாயில் உள்ள உணவு,, வயிற்றிற்குச் சென்று, ஜீரணமாகி, உடலுக்குச் சக்தியும், போஷாக்கும் அளிப்பதற்கு, சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கிறது. அதைப் போலவே, கர்மாக்களுக்கும் ,அவற்றின் பலன்களுக்கும் இடையில், ஒரு கால இடைவெளி இருக்கக் கூடும்.ஒரு விதை, அதை நீங்கள் விதைத்த உடனேயே ஒரு மரமாக ஆவதில்லை. அந்த விதை முதலில் முளைத்து, செடியாக ஆகி, பின்னர் ஒரு மரமாக ஒரு காலத்தில் வளருகிறது. மரமனைத்தும் அந்த ஒரு சிறிய விதையினுள் இருக்கிறது. நீங்கள் விதையை மட்டுமே பார்க்கிறீர்களே அன்றி, அதில் மறைந்திருக்கும் மரம் முழுவதையும் அல்ல. அதைப் போலவே, உங்களது எதிர்காலம், தற்காலத்தில் நீங்கள் செய்யும் கர்மாக்களில் தான் பொதிந்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள், உங்களது எதிர் காலத்தைக் கற்பனை செய்து கொண்டு, அதற்காகக் காத்திருக்கிறீர்கள். நீங்கள் அப்படிக் காத்திருக்கத் தேவையில்லை; ஏனெனில், உங்களது எதிர்காலம், உங்களது நிகழ்காலத்தில் தான் இருக்கிறது ! உங்களது தற்போதைய சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களே , உங்களது எதிர் காலத்தை முடிவு செய்கின்றன. எனவே, உங்களது நிகழ்காலத்தைப் புனிதமானதாகவும், சீரியதாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்.
விதை எப்படியோ, பழம் அப்படியே. பிற்காலத்தில் நல்ல பலன்களைப் பெற, இப்போது புனிதமான செயல்களை ஆற்றுங்கள் - பாபா