azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Modern friends come close to you as long as there is money in your pocket and your father has a high position. They will say, ‘hello, hello’ to you. When your pocket is empty or your father has retired, they will leave you immediately. God is not like that. God is always with you, in you, above you, and below you. He is your real friend. It is only God who will protect you in difficulties. God will always be with you. God is the embodiment of eternal bliss, wisdom absolute, beyond the pair of opposites, and expansive and pervasive like the sky. God will never forsake you. Have friendship with such a true Friend. Then only will your life as a human being become worthwhile. When you have such a friend, you will never fall short of anything. Troubles and difficulties can never bother you. You will always be blissful. (Divine Discourse, Apr 7, 1993)
GOD ALONE IS TOTALLY SELFLESS AS FRIEND AND BENEFACTOR. - BABA
நவீன கால நண்பர்கள்,உங்கள் பையில் பணம் இருக்கும் வரையிலும், உங்களது தந்தைக்கு ஒரு உயர்பதவி இருக்கும் வரையிலும் தான், உங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் உங்களை, ‘’ ஹலோ, ஹலோ ‘’ என்று அழைப்பார்கள்.உங்கள் பை காலி ஆனாலோ அல்லது உங்களது தந்தை பதவி ஓய்வு பெற்று விட்டாலோ, உங்களை விட்டு உடனேயே போய் விடுவார்கள். இறைவன் அப்படி அல்ல.இறைவன் எப்போதும் உங்களுடன், உங்களுள், உங்களுக்கு மேலும் மற்றும் உங்களுக்கு கீழும் இருப்பான்.அவனே, உங்களது உண்மையான நண்பன். கஷ்ட காலங்களில் உங்களைக் காப்பவன் இறைவன் ஒருவனே. இறைவன் உங்களுடன் எப்போதும் இருப்பான். அவன் சச்சிதானந்த ஸ்வரூபன், ஞானமயமானவன், இரு விதமான எதிர்மறைகளுக்கு அப்பாற் பட்டவன், ஆகாயத்தைப் போல பரந்து விரிந்தவன். இறைவன், உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. இப்படிப் பட்ட ஒரு உண்மையான நண்பனுடன் , நட்பு கொண்டு இருங்கள். அதன் பின்னரே, ஒரு மனிதனாக உங்களது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.இப்படிப் பட்ட ஒரு நண்பன் உங்களுக்கு இருக்கும் போது, உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. கஷ்ட, நஷ்டங்கள் உங்களை ஒருபோதும் துன்புறுத்தாது. நீங்கள் எப்போதும் ஆனந்த மயமாக இருப்பீர்கள்.
நண்பனாகவும், நலமளிப்பவனாகவும் இருப்பதில், இறைவன் ஒருவனே முழுமையான தன்னலமற்றவன் - பாபா