azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Cultivation of good thoughts is good conduct (dharma). When we protect dharma, dharma will protect us in turn (Dharmo rakshati rakshitaha). If you hurt dharma, you will be hurt in return! When our own mind generates good thoughts, it protects us. Our own mind can harm us as well. How? It harms us through its bad thoughts! Hence, our mind is responsible for all our difficulties, troubles, and miseries. So, keep your mind pure and free from bad thoughts. The moment a thought arises in your mind, use your discrimination to know: is it good or bad? When you begin such analysis, the speed of your thoughts will decrease. If on the other hand, you immediately act as per your thoughts, their speed will increase. Therefore, take the time to control the thought process through thorough enquiry. First enquire, then act. Start early, drive slowly, reach safely. If you slow down your thoughts, you will definitely arrive safely! (Divine Discourse, Apr 7, 1993)
COMMAND THE MIND, REGULATE YOUR CONDUCT, AND KEEP YOUR HEART STRAIGHT AND CLEAR,THEN YOU WILL GET THE GRACE OF GOD. - BABA
நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதே தர்மமாகும். தர்மத்தை நாம் காத்திட்டால், அது திரும்ப நம்மைக் காத்திடும் ( தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ ). நீங்கள் தர்மத்தைப் பாதித்தால், பதிலுக்கு நீங்கள் பாதிக்கப் படுவீர்கள் ! நமது மனம் நற்சிந்தனைகளை உருவாக்கும் போது, அது நம்மைக் காத்திடும். நமது சொந்த மனமே நமக்குத் தீங்கும் கூட விளைவிக்க முடியும். எப்படி ?அது தனது தீய எண்ணங்களின் மூலம் நம்மை பாதிக்கிறது! எனவே, நமது மனமே, நமது அனைத்து கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் துயரங்களுக்குக் காரணமாகும். எனவே, உங்கள் மனதை பரிசுத்தமாகவும், தீய சிந்தனைகள் இன்றியும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் ஒரு சிந்தனை எழுந்தவுடனேயே, உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி இது நல்லதா அல்லது கெட்டதா என ஆராயுங்கள். நீங்கள் இப்படிப் பட்ட ஆய்வைத் தொடங்கியவுடனேயே, உங்கள் சிந்தனைகளின் வேகம் குறைந்து விடும். அதற்கு மாறாக, உங்களது சிந்தனைகளின் படி நீங்கள் உடனேயே செயல் பட்டால், அவற்றின் வேகம் அதிகமாகி விடும். எனவே, முழுமையான ஆய்வின் மூலம் உங்களது சிந்தனைகளின் செயல்முறையைக் கட்டுப் படுத்த நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஆய்வு செய்யுங்கள், பின்னர் செயல்படுங்கள். நேரத்துடன் கிளம்பி, நிதானமாக பயணித்து, நிம்மதியாகச் சென்றடையுங்கள். உங்கள் சிந்தனைகளின் வேகத்தைக் குறைத்தால், நீங்கள் நிச்சயம் பத்திரமாக வந்தடைவீர்கள் !
மனதைக் கட்டுப்படுத்தி, உங்கள் நடத்தையை சீராக்கி, உங்கள் இதயத்தை நேராகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் இறை அருளைப் பெறுவீர்கள் - பாபா