azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

There are two things that draw one’s mind: hitha (the beneficial) and priya (the pleasant). Prefer the beneficial to the pleasant, for the pleasant might lead you down the sliding path into the bottomless pit. Vibhishana spoke hitha to Ravana, but he lent his ear to the priya that his sycophantic ministers spoke. He sealed his fate by this preference of pleasant over beneficial. The true doctor is interested in curing you of all illness and so, he advises hitha to restore your health; the Guru is such a doctor. Obey him even when his prescription is unpalatable, for, you will be cured! People suffer from the fever of the senses and they try the quack remedies of recreations, pleasures, picnics, banquets, dances, etc., only to find that the fever does not subside. The fever can subside only when the hidden virus is rendered ineffective. That virus will die only when the rays of jnana (wisdom) fall upon it. (Divine Discourse, Mar 16, 1966)
REAL PEACE OF MIND HAS NO UPS AND DOWNS; IT CANNOT BE PARTIAL IN ADVERSITY
AND WHOLE IN PROSPERITY. - BABA
இரண்டு விஷயங்கள் ஒருவரது மனதை ஈர்க்கின்றன ; ஹிதமானவை ( நன்மை அளிப்பவை ) மற்றும் பிரியமானவை ( இன்பம் தருபவை ).இன்பம் தருபவற்றை விட, நன்மை அளிப்பவற்றையே தேர்ந்தெடுங்கள், ஏனெனில், இன்பம் தருபவை, உங்களை படு குழிக்கு இட்டுச் செல்லக் கூடும். விபீஷணன், இராவணனுக்கு நன்மை அளிப்பவற்றை அறிவுறுத்தினான்; ஆனால், அவன், அவனை துதிபாடும் அமைச்சர்களது இன்பம் தரும் பேச்சிற்குச் செவி மடுத்தான். இவ்வாறு, நன்மை அளிப்பவற்றை விட, இன்பமானவற்றைத் தேர்ந்தெடுத்ததால், அவன் தனது அழிவைத் தேடிக் கொண்டான். உண்மையான மருத்துவர் உங்களது அனைத்து வியாதிகளையும் குணப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்; எனவே, உங்களது ஆரோக்கியத்தை மீட்க, அவர் உங்களுக்கு நன்மை அளிப்பவற்றையே அறிவுறுத்துவார்; குருவும் அப்படிப் பட்ட ஒரு மருத்துவரே. அவரது அறிவுரை கசப்பாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் , நீங்கள் குணமடைவீர்கள் ! மனிதர்கள் , புலன்களின் ஜூரத்தால் கஷ்டப்படுகிறார்கள்; அவர்கள் கேளிக்கைகள், இன்பங்கள், உல்லாசப் பயணங்கள், விருந்துகள், நடனங்கள் போன்ற போலி மருந்துகளை பயன்படுத்தி விட்டு, ஜூரம் தணியவில்லை என்பதைக் காண்கிறார்கள். மறைந்திருக்கும், விஷக்கிருமியை செயலிழக்கச் செய்தால் மட்டும் தான் ஜூரம் குறையும். ஞானத்தின் கிரணங்கள், அதில் பட்டால் மட்டுமே, அந்த விஷக் கிருமி அழியும்.
உண்மையான மனச்சாந்தி என்பது ஏற்றத் தாழ்வு அற்றது; அது வறுமையில் பாதியாகவும், வளமையில் முழுமையானதாகவும் இருக்க முடியாது - பாபா