azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

God is the source of all Love. Love cures pettiness, hate and grief. Love loosens bonds; it saves you from the torment of birth and death. Love binds all hearts in a soft silken symphony. Seen through the eyes of Love, all beings are beautiful, all deeds are dedicated, and all thoughts are innocent. Love God and Love the world as the vesture of God, no more, no less. The world is one vast kin. If you pay attention to the individual, differences thrust themselves on you. Fix your attention on the samasthi (the collective), then points of identity will be more apparent. If you concentrate on the outer labels - Hindu, Christian, Muslim, Parsi, Buddhist - then, you will develop pride or contempt or hatred! But if you focus on the struggle that man undergoes to raise himself from the flesh to reach the level of Divinity, you will find all labels insignificant. Then it is all love, co-operation, mutual encouragement and appreciation. (Divine Discourse, Jul 7, 1968)
அனைத்து ப்ரேமையின் மூலாதாரம் இறைவனே. அற்பத்தனம், த்வேஷம் மற்றும் துக்கத்தை, ப்ரேமை, குணப் படுத்தி விடுகிறது. ப்ரேமை பந்தங்களை விடுவிக்கிறது ; அது, உங்களை பிறப்பு, இறப்பு என்ற வேதனையிலிருந்து காப்பாற்றுகிறது. ப்ரேமை, ஒரு இதமான, மிருதுவான இன்னிசையால், இதயங்களை இணைக்கிறது.ப்ரேமையின் பார்வையில் நோக்கும் போது அனைத்தும் அழகாகவும், அனைத்து செயல்களும் அர்ப்பணமாகவும், அனைத்து சிந்தனைகளும் தீங்கற்றவையாகவும் தோன்றுகின்றன. இறைவனை நேசியுங்கள்; இந்த உலகை இறைவனது வஸ்திரமாக மட்டுமே கருதி நேசியுங்கள். உலகம், ஒரு பரந்து விரிந்த குடும்பம். ( வஸுதைவ குடும்பகம்) உங்கள் கவனம் தனி மனிதன் ( வ்யஷ்ட்டி) மீது இருந்தால், வித்தியாசங்கள், உங்கள் மீது திணிக்கப் படுகின்றன. உங்கள் கவனத்தை, சமுதாயத்தின் மீது ( சமஷ்ட்டி) நிலை கொள்ளச் செய்யுங்கள்; ஒற்றுமையின் அம்சங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். வெளிப்புற அடையாளச் சின்னங்களான, இந்து, கிருஸ்துவர், முகம்மதியர், பார்ஸி, புத்த மதத்தவர் ஆகியவற்றை மட்டுமே உற்று நோக்கினால்,பின்னர், நீங்கள் தற்பெருமை அல்லது அலட்சியம் அல்லது த்வேஷத்தையே அபிவிருத்தி செய்து கொள்வீர்கள். ஆனால், நீங்கள், மனிதன், தன்னை, தேஹம் என்ற நிலையிலிருந்து தேவன் என்ற இறை நிலைக்கு உயரப் போராடுவதில் கவனம் செலுத்தினால், இந்த அடையாளங்கள் அனைத்தையும் அர்த்தமற்றவையாகக் காண்பீர்கள். பின்னர், அனைத்தும் ப்ரேமை, ஒத்துழைப்பு, பரஸ்பர ஊக்கம் மற்றும் பாராட்டுதலே.