azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone is eager to be happy; everyone wants to work less and gain more, give little and get amply, but nobody experiments with wanting less and giving more! Every want is a shackle that hinders movement - it is a drag on your feet. A young college student roams free on his two legs; when he marries, he becomes four-footed! A child makes him six-footed; thus, further restricting the range of his movements. The more the feet, the less the speed, the tighter his grip on the ground – Remember, centipedes can only crawl! More objects means more hurdles and handicaps! Reduce wants, live simply - that is the way to happiness. Attachment brings sorrow in its wake; at last, when death demands that everything be left behind and everybody be deserted, you are overpowered with grief! Be like the lotus on water; on it, not in it. Water is necessary for the lotus to grow, but lotus will not allow even a drop to wet it. (Divine Discourse, May 15, 1969.)
REDUCE YOUR WANTS, MINIMIZE YOUR DESIRES. THAT’S THE KEY TO HAPPINESS! - BABA
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க ஆவலாக உள்ளார்கள்; ஒவ்வொருவரும் குறைவாக உழைத்து,அதிகமாக லாபம் பெறவும், குறைவாகக் கொடுத்து, நிறைவாகப் பெறவும் ஆசைப்படுகிறார்கள்: ஆனால் எவரும்,குறைவாக ஆசைப்பட்டு, அதிகமாகக் கொடுப்பதை சோதித்துப் பார்ப்பதில்லை! ஒவ்வொரு ஆசையும், உங்களது முன்னேற்றத்தை பின் இழுத்துச் செல்லும் பிணைச் சங்கிலியே. ஒரு இளம் கல்லூரி மாணவன் தனது இரண்டு கால்களில் சுதந்திரமாகத் திரிகிறான்; அவன் திருமணம் செய்து கொண்டவுடன், நான்கு கால் பிராணியாக ஆகி விடுகிறான் ! ஒரு குழந்தை அவனை ஆறு கால் கொண்டவனாக, அவனது இயக்கத்தை மேலும் கட்டுப் படுத்தி விடுகிறது. கால்கள் அதிகமானால் வேகம் குறைவு, நிலத்தில் அவன் கால் பதிப்பு மேலும் இறுகி விடுகிறது- நூறு கால் பூச்சி தவழத்தான் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் !அதிகமான பொருட்கள் என்றால், அதிகமான தடைகள் மற்றும் ஊனங்கள் என்றே பொருள். தேவைகளைக் குறைத்துக் கொண்டு, எளிமையாக வாழுங்கள்- அதுவே சந்தோஷத்திற்கான பாதையாகும்.பற்றுதல் , அதனுடன் துன்பத்தைத் தான் கொண்டு வரும்; இறுதியில், மரணம், அனைத்தையும் விட்டு விட்டு, அனைவரையும் உதறி விட்டுச் செல்ல வேண்டும் எனும் போது, நீங்கள் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறீர்கள் !நீருக்குள் இன்றி, நீரின் மேல் இருக்கும் தாமரையைப் போல இருங்கள். தாமரை வளர, நீர் தேவை தான்; ஆனால் ஒரு சொட்டு நீர் கூட தன்னை நனைப்பதை தாமரை அனுமதிப்பதில்லை.
தேவைகளைக் குறைத்து, ஆசைகளைச் சிறிதாக்குங்கள்,
அதுவே மகிழ்ச்சியின் திறவு கோலாகும் - பாபா