azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

There is iron and there is also the magnet. The magnet will draw the iron to itself; that is the destiny of both. But if the iron is covered with the rust, the grace of the magnet may not operate strong enough to draw the iron near. Greed for sensual pleasure will certainly act as rust! It acts as dust, which induces rust; the rust will ultimately burst the iron itself and change its innate nature. So iron has to be tested constantly and dusted. Then, when it contacts the magnet, it too earns the magnetic quality and finally gets rest from its quest. That achievement is the best, for both magnet and iron. The dust of sensual greed can be prevented by keeping good company (satsang), and putting into practice the principles of good conduct that one must imbibe from holy scriptures! (Divine Discourse, Mar 11, 1968.)
IF YOU EARN THE GRACE OF THE DIVINE, EVEN MOUNTAINS OF
SIN CAN BE REDUCED TO DUST. - BABA
இரும்பு இருக்கிறது; காந்தமும் இருக்கிறது.காந்தம், இரும்பைத் தன்பால் ஈர்க்கிறது ; அதுவே அவை இரண்டின் விதியாகும். ஆனால், இரும்பில் துருப் பிடித்து இருந்தால், காந்தத்தின் சக்தி, இரும்பைத் தன் அருகில் ஈர்ப்பதற்குப் போதுமானதாக இருக்காது. புலனின்பங்களுக்கான பேராசை கண்டிப்பாகத் துரு போலவே வேலை செய்யும் ! அது, துருவை உருவாக்கும், தூசியைப் போலவே பணியாற்றும்; அந்தத் துரு இறுதியில், இரும்பையே உடைக்கச் செய்து, அதன் உள்ளார்ந்த தன்மையையே மாற்றி விடும். எனவே, இரும்பை அவ்வப்போது பரிசோதித்து, தூசியை நீக்க வேண்டும். பின்னர், அது காந்தத்தை நெருங்கும் போது, அதுவும் கூட காந்தத் தன்மையைப் பெற்று, இறுதியாக, தனது தேடுதலில் இருந்து ஓய்வு பெறும். அந்த சாதனையே, இரும்பு மற்றும் காந்தம் என்ற இரண்டிற்கும் மிகச் சிறந்ததாகும். ஸத்ஸங்கம் மற்றும், புனித நூல்களிலிருந்து ஒருவர் புரிந்து கொண்ட நன்னடத்தையின் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், புலனின்பப் பேராசை எனும் தூசியைத் தடுக்க முடியும் !
இறை அருளை, நீங்கள் பெற்று விட்டால், மலை அளவு பாவங்களையும் கூட, தூசியைப் போலக் குறைத்து விடலாம் - பாபா