azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Train your mind to dwell on the inner equipment rather than the outer attractions. Use your mind to cleanse your feelings, impulses, attitudes, tendencies and levels of consciousness. Let it not accumulate dirt from the outer world and deposit them within itself. If it is attached to work, the consequences of work get attached to it. Unattached work is the purest; it does not encumber the mind with elation or disappointment. 'I did it', 'This is mine': these are the two fangs that make the individual poisonous. Pull out the fangs, the snake can be handled and played with as a pet! Every samithi and society must be vigilant to see that egoism and the sense of personal possession, pride or achievement, do not invade them. That is the goal to be kept in view. (Divine Discourse, Apr 21, 1967)
LOVE IS THE KEY TO OPEN THE DOORS LOCKED BY EGOISM AND GREED!. - BABA
மனதிற்கு, வெளிப்புற கவர்ச்சிகளின் மீது அல்லாது, அந்தராத்மாவை தியானிப்பதற்குப் பயிற்சி அளியுங்கள். உங்களது உணர்வுகள், உந்துதல்கள், அணுகுமுறைகள், மனப்போக்குகள் மற்றும் விழிப்புணர்வு நிலைகள் ஆகியவற்றைப் பரிசுத்தப் படுத்த, உங்கள் மனதை, பயன்படுத்துங்கள். அது வெளி உலகிலிருந்து அழுக்குகளைச் சேகரித்து, தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் இருக்கட்டும். அது, கர்மாவில் பற்று வைத்தால், கர்ம பலன்கள், அதனுடன் சேர்ந்து விடும். பற்றற்ற கர்மாவே பரிசுத்தமானதாகும்; அது மனதிற்கு, உற்சாகம் அல்லது ஏமாற்றத்தால் தடை ஏற்படுத்துவதில்லை. ‘’ நான் செய்தேன் ‘’, ‘’ இது என்னுடையது’’ என்ற இரண்டுமே, ஒரு மனிதரை விஷமயமாக்கும், நச்சுப் பற்களாகும். இந்த விஷப் பற்களைப் பிடுங்கி விடுங்கள்; பின்னர், அந்தப் பாம்பை அடக்கி, ஒரு செல்லப் பிராணியைப் போல அதனுடன் விளையாட முடியும்! ஒவ்வொரு சமிதி மற்றும் சமூகமும், அஹங்காரம் மற்றும் தனது, தற்பெருமை அல்லது சாதித்து விட்டோம் போன்ற உணர்வுகள், ஊடுருவி விடாமல் பாரத்துக் கொள்ள வேண்டும். கருத்தில் கொண்டு இருக்க வேண்டிய குறிக்கோள் இதுவே.
அஹங்காரம் மற்றும் பேராசையால் மூடப்பட்டு இருக்கும்
கதவுகளைத் திறக்கும் சாவி ப்ரேமையே - பாபா