azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Let the validity of Bharatiya culture be examined through actual living, and one's own discovery of its values; and communicated to others by those who have experienced the peace and joy derivable from it. I do not want the extolling of the drug by persons who have not been themselves cured by it. Today, in the very land where this culture grew and flourished, immorality and corruption have destroyed happiness and contentment. Many condemn these things, but those are the very persons who commit the wrongs they deplore. In the history of India, you must have noticed that all the great movements and empires were motivated by spiritual undercurrents, not by political or economic stresses. You must make politics subserve the need to promote and perfect the fundamentals of Bharatiya culture. (Divine Discourse, Apr 21, 1967)
YOU CAN TRANSFORM EVEN A WICKED PERSON THROUGH YOUR LOVE. - BABA
நிஜ வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து, அதன் பண்புகளைத் தானே புரிந்து கொண்டு, அதிலிருந்து சாந்தி, சந்தோஷங்களை அடைந்தவர்களிடமிருந்து, அவற்றை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதன் மூலம் , பாரதீய கலாசாரத்தின் ஏற்புடைமை சோதித்துப் பார்க்கப்படட்டும். அதிலிருந்து, தாங்களே குணமடையாதவர்களால், ஒரு மருந்து பாராட்டப் படுவது எனக்கு ஏற்புடையதல்ல. இன்று, இந்த கலாசாரம் வளர்ந்து, தழைத்தோங்கிய அதே பூமியில், ஒழுக்கக் கேடும், ஊழலும், சந்தோஷம் மற்றும் திருப்தியை அழித்து விட்டன. பலர் இவற்றைக் கண்டனம் செய்கிறார்கள்; ஆனால், அவர்கள் கண்டனம் செய்யும் அதே தவறுகளை இழைப்பவர்களும் அவர்களே. பாரத வரலாற்றில், தலை சிறந்த இயக்கங்களும், சாம்ராஜ்யங்களும், அரசியல் அல்லது பொருளாதார நோக்கங்களால் அன்றி, ஆன்மீக நீரோட்டங்களால் தான் உந்தப்பட்டன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.பாரதீய கலாசாரத்தின் அடிப்படை தத்துவங்களை வளர்த்து, சீரமைப்பதன் தேவைக்கு உதவுமாறு, நீங்கள் அரசியலை ஆக்க வேண்டும்.
உங்களது ப்ரேமையின் மூலம், ஒரு தீய மனிதனைக் கூட ,
நீங்கள் மாற்றி விட முடியும் - பாபா