azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Dedicate all your thoughts and aspirations to God and surrender yourselves to the Will of the Divine. Surrender may appear to be difficult, but it is not so. It is in fact like keeping your money in the bank. You can withdraw money from your bank account whenever you need. Similarly, when you entrust all your concerns to Bhagawan, you can draw from Him whatever you need. What stands in the way of surrender? It is your ego, your possessiveness and lack of sufficient trust in the Lord! People desperately cling to their possessions saying: "My money, my house, etc.” Sometime or the other your wealth will go. But, once you truly surrender to the Divine, you acquire Lord’s grace. Grace, once earned, will protect you and satisfy all your needs. God does not need your wealth. He is always a Chitta Chora (stealer of hearts), not a vitha chora (stealer of wealth). It is you who must change from vitha choras to chitta choras. (Divine Discourse, Jul 17, 1988)
உங்களது சிந்தனைகளையும், அபிலாஷைகளையும், இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு, தெய்வத்தின் ஸங்கல்பத்திற்கு, சரணாகதி அடைந்து விடுங்கள். சரணாகதி என்பது கடினமான ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் அது அப்படி அல்ல. உண்மையில் அது ,நீங்கள் உங்கள் பணத்தை வங்கியில் வைப்பது போன்றதாகும். உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது உங்களது வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதைப் போலவே, உங்களது அனைத்து அக்கறைகளையும் பகவானிடம் ஒப்படைத்து விட்டீர்கள் என்றால்,உங்களுக்குத் தேவைப்படுவதை, அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். சரணாகதிக்கு இடையில் தடையாக இருப்பது என்ன? அது உங்களது அஹங்காரம், உங்களது தனது என்ற உணர்வு மற்றும் இறைவன் பால் போதுமான நம்பிக்கை இல்லாமை! மக்கள், மூர்க்கத் தனமாக, தங்களது உடமைகளை,’’ எனது பணம், என் வீடு ’’ எனக் கூறிக் கொண்டு பிடிவாதமாகப் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் உங்களது சொத்துக்கள் உங்களை விட்டுப் போகத்தான் வேண்டும். ஆனால், ஒருமுறை, நீங்கள் உண்மையாகவே இறைவன் பால் சரணடைந்து வீட்டீர்கள் என்றால், உங்களுக்கு அவனது அருள் கிட்டி விடுகிறது. ஒருமுறை கிடைத்து விட்டால், இறை அருள் உங்களைக் காத்து, உங்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து விடும். இறைவனுக்கு உங்களது ஆஸ்திகள் தேவையில்லை. அவன், எப்போதும் இதயங்களைத் திருடுபவனே ( சித்த சோரா) அன்றி, ஆஸ்திகளைத் திருடுபவன் ( வித்த சோரா ) அல்ல. வித்த சோரர்களிலிருந்து, சித்த சோரர்களாக மாற வேண்டியது நீங்கள் மட்டுமே.