azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

When the eye sees someone who is regarded as an enemy, there is an upsurge of ill-will in the mind. On the other hand, when one sees a dear friend the reaction is one of love and affection. As in the case of things seen, what we hear can also have bad or good effects. The power of words to influence the mind is even more. Great Vedic pronouncements like Aham Brahmasmi (I am Divine), Tat-Twam-Asi (Thou Art That) and Ayam Atma Brahma (This Self is God) provide inspiration to aim at the highest goal. They should not be construed or used in any manner to inflate one's ego. Every expression is charged with a power of its own. When the words are abusive and vulgar, they arouse excitement, anger or depression. But when the words used are sacred, they generate a sanctifying and elevating power. The joy or distress experienced by the mind is the result of the impressions conveyed by the senses. [Divine Discourse, Jul 31, 1986]
எதிரி என்று கருதப்படும் யாராவது ஒருவரைக் கண்கள் கண்டால், மனதில் பகைமை உணர்வு பொங்கி எழுந்து விடுகிறது, அதே சமயம், ஒருவர் ஒரு நெருங்கிய நண்பரைப் பார்த்தால், ப்ரேமை மற்றும் பரிவின் உணர்வு தோன்றுகிறது. பார்க்கும் பொருட்களைப் போலவே, நாம் கேட்பவையும் கூட, தீய அல்ல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மனதில் தாக்கம் ஏற்படுத்துவதில், வார்த்தைகளின் சக்தி , மேலும் அதிகமானதாகும். வேத மஹா வாக்கியங்களான, ‘’அஹம் பிரம்மாஸ்மி ‘’ ( நானே தெய்வம் ), ‘’ தத் த்வம் அஸி’’ ( நீ அதே தான் )‘’, ‘’அயம் ஆத்மா ப்ரம்மா ‘( ஆத்மாவே ப்ரம்மன் ) போன்றவை, மிக உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கு உத்வேகம் அளிக்கின்றன. அவை, எந்த விதத்திலும், ஒருவரது அஹங்காரத்தை உயர்த்துவதாகக் கருதவோ அல்லது அதற்காக அவற்றைப் பயன்படுத்தவோ கூடாது. ஒவ்வொரு வார்த்தையும், தனக்கே உரித்தான சக்தியைக் கொண்டவை. வார்த்தைகள், கொடுமையானதாகவும், ஆபாசமானதாகவும் இருந்தால், அவை மனக்கிளர்ச்சி, கோபம் அல்லது மனத் தளர்ச்சியை கிளப்பி விடுகின்றன. ஆனால், பயன்படுத்தப் படும் வார்த்தைகள், புனிதமானவையாக இருந்தால், அவை பரிசுத்தமான, உயர்த்தும் ஒரு சக்தியை உருவாக்குகின்றன. மனம் அனுபவிக்கும் சந்தோஷம் அல்லது துன்பம், புலன்கள் தரும் கருத்துக்களின் விளைவே.