azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Amongst the qualities that make up a flawless character, love, patience, forbearance, steadfastness, and charity are the highest, and must be revered. The hundred little deeds you indulge in everyday harden into habits; these habits mould your outlook towards life. All that you weave in your imagination, seek and yearn leave an indelible imprint on your mind and form a picture of ‘your world’ and then you get attached to it. But whatever is your character today, it can certainly be modified by changing your thought pattern. The wickedness of nobody is incorrigible. Wasn’t the robber Angulimala turned into a kindhearted person by Buddha? Didn’t thief Rathnakara become Sage Valmiki? You have within your reach, the capacity to challenge your own evil propensities and change them. By selfless service, renunciation, devotion and prayer, old habits can be discarded and new habits that take you along the divine path can be instilled. [Prema Vahini, Ch 2]
ஒரு அப்பழுக்கற்ற பண்பை உருவாக்கும் குணங்களில், ப்ரேமை,பொறுமை, சகிப்புத் தன்மை, மனுஉறுதி மற்றும் தர்மம் ஆகியவை மிகவும் உயர்ந்தவையும், போற்றப்பட வேண்டிவையும் ஆகும். நீங்கள் அன்றாடம் ஈடுபடும் நூற்றுக்கணக்கான செயல்கள், பழக்கங்களாக நிலை கொண்டு விடுகின்றன; இந்தப் பழக்கங்கள் வாழ்க்கையைப் பற்றிய உங்களது நோக்கினை உருவாக்குகின்றன. நீங்கள் உங்களது கற்பனையில் புனைபவை, தேடுபவை மற்றும் நாடுபவை அனைத்தும் உங்கள் மனதில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்து, ‘’ உங்கள் உலகம் ‘’ என்ற ஒரு ஓவியத்தை வரைந்து விடுகின்றன ; பின்னர், நீங்கள் அதன் மீது பற்று வைத்து விடுகிறீர்கள். ஆனால், இன்று உங்களது பண்பு எதுவாக இருந்தாலும், உங்களது சிந்தனைப் பாங்கை மாற்றுவதன் மூலம், அதைக் கண்டிப்பாகத் திருத்தி விட முடியும். எவரது துர்குணமும் திருத்த முடியாத ஒன்று அல்ல. கொள்ளைக்காரனான அங்குலிமால், பகவான் புத்தரால் ஒரு கனிவான இதயம் கொண்டவராக மாற்றப் படவில்லையா? திருடரான ரத்னாகர், வால்மீகி மகரிஷியாக ஆகவில்லையா? உங்களது தீய குணங்களுக்கு சவால் விடுத்து அவற்றை திருத்தி விடக்கூடிய சக்தி, உங்களுக்குக் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. தன்னலமற்ற சேவை, துறவு மனப்பாங்கு, பக்தி மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றின் மூலம், பழைய பழக்கங்களை துறந்து, உங்களைத் தெய்வீகப் பாதையில் இட்டுச் செல்லும், புதிய பழக்கங்களைப் புகுத்தி விட முடியும்.