azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Buddha gave utmost importance to sense control. To control your mind, you should control your five senses. Only then you can realise God. Develop the spirit of surrender. Perform all deeds with a spirit of devotion to God and as an offering to Him. Then your every action will become divine. Everything in this world can be acquired through love alone. Love is God, live in love. We can understand spirituality only by cultivating love. That is why I often say, “Start the day with love, Fill the day with love, Spend the day with love, End the day with love - This is the way to God”. The world cannot exist without love. Everything is possible by the power of love. Never entertain bad or inappropriate desires, it will bring about your ruin. You can train your mind and senses to be peaceful and sacred by loving God always. (Divine Discourse, May 26, 2002.)
பகவான் புத்தர், புலனடக்கத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தார். உங்கள் மனதைக் கட்டுப் படுத்த, நீங்கள் உங்களது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.அதன் பின்னரே நீங்கள் தெய்வத்தை உணர முடியும். சரணாகதி உணர்வை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். அனைத்து செயல்களையும் இறை பக்தி உணர்வோடும், அதை இறைவனுக்கு ஒரு அர்ப்பணமாகவும், ஆற்றுங்கள். பின்னர், உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வீகமாகி விடும். இந்த உலகில் அனைத்தையும், ப்ரேமையினால் மட்டுமே அடைய முடியும். அன்பே இறைவன், அன்பில் வாழுங்கள். அன்பை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலமே, நாம், ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் நான் அடிக்கடி, ‘’ உங்கள் நாளை அன்புடன் தொடங்குங்கள்; உங்களை நாளை அன்பால் நிரப்புங்கள்,உங்கள் நாளை அன்புடன் கழியுங்கள், உங்கள் நாளை அன்புடன் முடியுங்கள், அதுவே இறைவனை அடைவதற்கான வழி ‘’ என்று கூறுகிறேன். இந்த உலகம், அன்பின்றி இருக்க முடியாது. ப்ரேம சக்தியின் மூலம் அனைத்தும் சாத்தியமே. ஒரு போதும் கெட்ட அல்லது தகாத ஆசைகளை வைத்துக் கொள்ளாதீர்கள்; அது உங்களுக்கு அழிவையே தேடித் தரும். இறைவனை நேசிப்பதன் மூலம், நீங்கள் உங்கள் மனம் மற்றும் புலன்களை அமைதியாகவும், புனிதமாகவும் இருக்கப் பழக்கிக் கொள்ளலாம்.