azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Country is not a mere piece of land; it is an assemblage of citizens. For countries to progress, its citizens must cultivate moral, ethical, and spiritual values. It is not possible for citizens and leaders to cultivate these values unless they practice them right from childhood! Life becomes meaningless if one does not take to righteous actions from an early age. Modern students are not able to refine their lives. So the parents and the teachers should play an active role in shaping the lives of the students. First and foremost, they have to enquire as to how the students can get rid of their evil tendencies. Just as a boulder becomes worthy of adoration and respect when it is carved into a beautiful idol by a sculptor, so also the students will become ideal citizens if they are brought up in the right environment. The teachers and parents are responsible for the good and bad in students. [Divine Discourse, Jul 26, 1999]
TRUE CULTURE CONSISTS IN THE RECOGNITION OF THE UNITY
THAT UNDERLIES THE DIVERSITY IN MANKIND. - BABA
தேசம் என்பது ஒரு வெறும் நிலப்பரப்பு மட்டும் அல்ல; அது குடிமகன்களின் ஒரு கூட்டத் திரள் ஆகும்.தேசங்கள் முன்னேற வேண்டும் என்றால், அவற்றின் குடிமக்கள், ஒழுக்கம், நெறிமுறை மற்றும் ஆன்மீகப் பண்புகளை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். குடிமக்களும், தலைவர்களும் இந்தப் பண்புகளை, சிறு வயதிலிருந்தே கடைப் பிடிக்கவில்லை என்றால், அவற்றை வளர்த்துக் கொள்ள முடியாது ! இளம் பிராயத்திலிருந்தே ஒருவர் தார்மீகமான செயல்களில் ஈடுபடவில்லை என்றால், வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். நவீன கால மாணவர்களால் தங்களது வாழ்க்கைகளை சீர்திருத்திக் கொள்ள முடியவில்லை. எனவே, மாணவர்களின் வாழ்க்கைகளை உருவாக்குவதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரு முக்கிய பங்கு ஏற்க வேண்டும். முதன் முதலில், அவர்கள், மாணவர்கள் எவ்வாறு தங்களது தீய குணங்களை விட முடியும் என்பதை ஆராய வேண்டும். எவ்வாறு ஒரு பாறை, ஒரு சிற்பியால் செதுக்கப் பட்ட பின்,போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய ஒரு விக்ரஹமாக ஆகிறதோ, அவ்வாறே, மாணவர்களும் சரியான சூழ்நிலையில் வளர்க்கப் பட்டால், இலட்சிய குடிமகன்களாக ஆகி விடுவார்கள். மாணவர்களிடம் உள்ள நல்லவை மற்றும் கெட்டவைகளுக்கு, ஆசிரியர்களும், பெற்றோர்களுமே பொறுப்பாவார்கள்.
மனித குலத்தின் வேற்றுமையின் அடிப்படையில் இருக்கும் ஒற்றுமையை உணருவதில் தான் உண்மையான கலாசாரம் இருக்கிறது - பாபா