azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Many grieve: “It is said that having the vision of a holy person (darshanam) destroys our sin (papanasam). Well, I have had darshan not once but many times, and yet, my evil fate has not left me and I am suffering even more than before.” True, you may have come and had not one, but several darshans, and you may have sowed fresh seeds secured from the Divine — seeds of love, faith, devotion, good company, Godly thoughts, remembering God’s name, etc. So you have learnt the art of intensive cultivation and soil preparation. You have just now sown the seeds in well-prepared fields of cleansed hearts. The troubles and anxieties you experience presently are the crop collected from your previous harvests, so do not grieve and lose heart. Everyone must consume the grain they’ve already stored from their previous harvests. Bear with it patiently, until the new harvest comes in! (Divine Discourse, March, 1983.)
பலர், ‘’ ஒரு புனிதமான ஆன்றோரின் தரிசனம், எங்களுடைய பாவத்தை அழிக்கிறது (பாபநாசனம்) என்று சொல்லப் படுகிறது. நல்லது, நான் ஒருமுறை அல்ல பல முறை தரிசனம் செய்து விட்டேன், இருந்தாலும் எனது தீய வினை என்னை விட்ட பாடில்லை; நான் முன்பை விட அதிகமாகக் கஷ்டப்படுகிறேனே ‘’ என்று புலம்புகிறார்கள். உண்மை தான், நீங்கள் பல முறை வந்து, ஒன்றல்ல பல தரிசனங்களைப் பெற்றிருக்கலாம்; தெய்வத்திடம் இருந்து பெற்ற, ப்ரேமை, நம்பிக்கை, பக்தி, நல்லோரின் நட்பு வட்டம், தெய்வீக சிந்தனைகள், இறை நாமஸ்மரணை போன்ற புதிய விதைகளை விதைத்திருக்கலாம். எனவே, நீங்கள் தீவிர விவசாயம் மற்றும் மண் பண்படுத்துதலின் கலையைக் கற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள், நன்கு பண்படுத்தப் பட்ட பரிசுத்தமான இதயங்கள் எனும் நிலத்தில் , இப்போது தான் இந்த விதைகளை விதைத்துள்ளீர்கள். நீங்கள் இப்போது அனுபவிக்கும் கவலைகள் மற்றும் துன்பங்கள், உங்களது முந்தைய அறுவடைகளில் நீங்கள் குவித்து வைத்துள்ளவையே; எனவே, மனம் வருந்தி, தைரியத்தை இழக்காதீர்கள். ஒவ்வொருவரும், தாங்கள், தங்களது முந்தைய அறுவடைகளில் முன்பே சேமித்து வைத்துள்ள தானியங்களை உட்கொண்டே ஆக வேண்டும். புதிய அறுவடை வரும் வரை, அவற்றைப் பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் !