azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

A great painter once came to a prince and offered to do a fresco on a palace wall; behind him came another, who declared that he would paint on the opposite wall whatever painting the first one drew! The prince ordered a thick curtain in between the painters while they were painting. Both were commissioned to start the task. The second person finished his work the exact same moment the first one completed. The prince arrived, saw the fresco and admired it very much. Then he ordered the curtain to be removed, and lo, on the wall facing the fresco, was an exact duplicate of the picture that the first man had so laboriously painted! Exact — because the second painter polished the wall, making it a fine big mirror! Similarly, you must make your hearts clean, pure and smooth, so that the glory of the Lord might be reflected therein, and the Lord might see His own image on it. (Divine Discourse, March 1963.)
THERE IS REACTION, RESOUND AND REFLECTION, FOR EVERYTHING IN THIS WORLD. - BABA
ஒரு முறை, ஒரு தலை சிறந்த ஓவியர், ஒரு இளவரசரிடம் , அவரது அரண்மனைச் சுவரில், ஒரு சுவரோவியம் வரைய முன் வந்தார் ; அவர் பின்னாலேயே, இன்னொரு ஓவியர் வந்து, முதலாமவர் என்ன ஓவியம் வரைகிறாரோ, அதை அப்படியே, அதனது எதிர் சுவரில், தன்னால் வரைய முடியும் என்று அறிவித்தார் ! இளவரசர், அந்த ஓவியர்களுக்கிடையில், அவர்கள் வரையும்போது, ஒரு தடித்த திரையைப் போடுமாறு பணித்தார். இருவரும் தத்தம் பணியைத் துவக்கினார்கள். இரண்டாவது மனிதர், தனது பணியை, முதலாமவர் முடித்த அதே தருணத்தில், முடித்து விட்டார். இளவரசர், வந்து, அந்த சுவரோவியத்தைப் பார்த்து, மிகவும் பாராட்டினார்.பின்னர், அவர் அந்தத் திரையை விலக்குமாறு கட்டளை இட்டார்; என்ன ஆச்சரியம், அந்த சுவரோவியத்தின் எதிரில் இருந்த சுவரில்,முதல் மனிதர் மிகுந்த முயற்சியுடன் தீட்டிய அந்த ஓவியத்தின், அதே மாதிரியான நகல் இருந்தது ! துல்லியமான அதே ஓவியம் – ஏனென்றால், அந்த இரண்டாவது ஓவியர், அந்தச் சுவரை மெருகேற்றி, அதை ஒரு மிகச் சிறந்த பெரிய கண்ணாடியாக மாற்றி இருந்தார் ! அதைப் போலவே, நீங்களும்,, இறைவனது மஹிமை அவற்றில் பிரதிபலிப்பதற்கும், அவன் தனது சொந்த பிம்பத்தை அவற்றில் காணும் அளவிற்கும், உங்கள் இதயங்களை, தெளிவானதாகவும், பரிசுத்தமாகவும், சீரானதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த உலகில் , ஒவ்வொன்றிற்கும், ப்ரதிவினை,
ப்ரதித்வனி, ப்ரதிபலிப்பு உண்டு- பாபா