azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

At first look, everyone appears to be a devotee, but individuals respond differently to different circumstances. If you keep a ball of iron and dry leaf side by side, when there is no wind both of them will be stable and steady. But when there is a breeze, the dry leaf will be blown several miles away. The iron ball however will remain firm. If one has true love and unwavering faith in God, one will be like an iron ball, steady and undisturbed. On the other hand, if one is like a leaf, running away on account of difficulties and problems, how can one claim to be a true devotee? Develop pure and steady love and faith. Light has value only when there is darkness; otherwise it has no value by itself. Therefore, in times of trouble and sorrow, whenever problems arise, evoke the principle of Divinity. The Lord will shed illumination and light in moments of darkness! (Divine Discourse, Feb 17, 1985.)
மேலோட்டமாகப் பார்த்தால், ஒவ்வொருவரும் ஒரு பக்தராகத் தோற்றம் அளிக்கிறார்கள்; ஆனால், தனிப்பட்ட மனிதர்கள் , வெவ்வேறு சந்தர்ப்பங்களில் , வெவ்வேறாக நடந்து கொள்கிறார்கள். நீங்கள் ஒரு இரும்பு குண்டையும், ஒரு காய்ந்த சருகையும் அருகருகில் வைத்தால், காற்று இல்லாதபோது, இரண்டும் நிலையாகவும்,அசையாமலும் இருக்கும். ஆனால் ஒரு சிறு தென்றல் வீசினால், காய்ந்த சருகு, பல மைல் தூரம் வீசி எறியப்படும். ஆனால், இரும்பு குண்டு நிலையாக இருக்கும். ஒருவருக்கு தெய்வத்தின் மீது உண்மையான ப்ரேமையும், நிலைகுலையாத நம்பிக்கையும் இருக்குமானால், அவர், அந்த இரும்பு குண்டைப் போல, நிலையாகவும், உறுதியாகவும் இருப்பார். அதே சமயம், ஒருவர் அந்த காய்ந்த சருகைப் போல, கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகளால் ஓடிப்போய் விடுவார் என்றால், அவர் தன்னை ஒரு உண்மையான பக்தர் என்று எவ்வாறு கூறிக் கொள்ள முடியும்? பரிசுத்தமான, நிலையான ப்ரேமை மற்றும் நம்பிக்கையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். இருள் இருந்தால் தான் , ஒளிக்கு மதிப்பு; இல்லை என்றால், அதற்கு என்று ஒரு மதிப்பும் இல்லை. எனவே, துக்கம் மற்றும் துயரமான சமயங்களில், தெய்வீக தத்துவத்தை நினைவு கூறுங்கள். இறைவன், இருளான தருணங்களில், ஜோதியையும், ஒளியையும் பொழிவான்.