azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Temples are centres of discipline, where aspirants are guided step by step to attain a vision of truth. They are schools for training of the spirit, academies for promotion of scriptural studies, institutes of super-science, and laboratories for testing the values of life. They are hospitals for the treatment and cure not only of the ‘birth-death disease’, which has persisted for ages, but even the much more patent ‘mental disorders’ that trouble those who do not know the secret of acquiring peace. Temples are gymnasia where people are reconditioned and their hesitant faith, waning conviction, and the upsurging egotism is cured. The purpose of temple is to awaken the Divinity in humanity (Madhavatwa in manavatwa), inducing people to believe that the physical frames in which they live are themselves houses of God. (Dharma Vahini, Ch 10.)
THE HEART WITH COMPASSION IS THE TEMPLE OF GOD. - BABA
ஆலயங்கள், ஆன்மீக சாதகர்களுக்கு, படிப் படியாக சத்தியத்தின் தரிசனத்தைப் பெறுவதற்கு வழிகாட்டும், கட்டுப் பாட்டு மையங்கள். அவை, ஆத்மாவிற்கு பயிற்சி அளிக்கும் பள்ளிகள்,சாஸ்திரங்களைப் படிப்பதை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்கள், உயர்நிலை விஞ்ஞானத்தின் கல்லூரிகள் மற்றும் வாழ்க்கையின் பண்புகளைப் பரிசோதிக்கும், சோதனைக் கூடங்கள். அவை, காலம் காலமாகத் தொடரும் ‘’ ஜனன- மரணம் ‘’ என்ற வியாதிக்கு மட்டும் அல்லாமல், அதை விட வெளிப்படையாகத் தெரியும், சாந்தியைப் பெறுவது எப்படி என்று அறியாதவர்களை வாட்டும் , ‘’மனோவியாதிகளுக்கும்’’ கூட சிகிச்சை மற்றும் நிவாரணம் அளிக்கும் வைத்தியசாலைகள். ஆலயங்கள், மக்களை புணருத்தாரணம் செய்தும், அவர்களது தயக்கமான நம்பிக்கை, குறையும் இறைப் பற்று மற்றும் ஆர்ப்பரிக்கும் அஹங்காரம் ஆகியவற்றை குணப்படுத்தும், உடற்பயிற்சி நிலையங்களும் ஆகும். மனிதனுள், தெய்வீகத்தைத் ( மானவத்துள் மாதவத்துவம் ) தட்டி எழுப்பி, மக்களை, அவர்கள், தாங்கள் வாழும் பௌதீக உடல்களே, இறைவன் உறையும் ஆலயங்கள் என நம்புவதை ஊக்குவிப்பதே, ஆலயங்களின் குறிக்கோள்.
கருணை உள்ள இதயமே, கடவுள் வாழும் ஆலயம்- பாபா